Monday, 9 December 2024

 கல்வி  மட்டுமே வாழ்க்கையில் வெற்றியை தரும் 


கல்லூரிக்கே  போகாமல் மத்திய அரசு போட்டி தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன் 

தமிழக அரசின் 6 முதல் 12 வகுப்பு வரையிலான பாட புத்தகங்களை படித்தாலே ஐ.ஏ .எஸ்.தேர்வு உட்பட பல போட்டி தேர்வுகளை எளிதாக  எதிர்கொள்ளலாம் 

வானொலி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேச்சு 






தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் வானொலி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

                               ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். மதுரை அகில இந்திய வானொலி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் மற்றும் வானொலி அறிவிப்பாளர் நவநீதன் ஆகியோர் மாணவர்களிடம் கலந்துரையாடல் நடத்தினார்கள். 

                          அப்போது வேல்முருகன் மாணவர்களிடம் பேசுகையில், வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு கல்வி மட்டுமே மிகுந்த உதவியாக இருக்கும் .படிப்பு ,படிப்பு ,படிப்பு என்பது வாழ்க்கையில் எப்பொழுதுமே நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 

                          தமிழ்நாடு அரசின் 6 முதல் 12 வகுப்பு வரையிலான பாட நூல்களைப் படித்தால் ஐஏஎஸ் தேர்வு வரை மிக எளிதாக பதிலளிக்கலாம்.

                         ஆறாவது முதல் 10 வரையிலான படிப்பை கவனமுடன் படியுங்கள். அந்த புத்தகங்களில் இருந்துதான் பெரும்பாலான கேள்விகள் போட்டித் தேர்வுகளில் கேட்கப்படுகிறது.

                            எனவே கல்வியை முக்கியமாக வாழ்க்கையில் வைத்துக்கொள்ளுங்கள். வெற்றி தானாக வந்து சேரும். கல்லூரிக்கே  போகாமல் மாநில மற்றும் மத்திய அரசு போட்டி தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன்.

                          நான் பலமுறை போட்டித் தேர்வுகளில் தோல்வியுற்றாலும் வெற்றி அடைய வேண்டும் என்ற ஒரே இலக்குடன் முயற்சி செய்ததால் மாநில அரசின் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று பிறகு அப்பணியில் இருந்து மத்திய அரசின் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று இன்று மத்திய அரசு ஊழியராக பணியாற்றி கின்றேன்.

                        எனவே நன்றாகப் படியுங்கள். வாழ்க்கையில் வெற்றி எளிதாகக் கிடைக்கும். இவ்வாறு பேசினார். ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

 படவிளக்கம் :  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மதுரை அகில இந்திய வானொலி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வேல்முருகனுடன் பள்ளி மாணவர்களின்  கலந்துரையாடல் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.  பகுதி நேர  வானொலி அறிவிப்பாளர் நவநீதன் முன்னிலை வகித்தார்.


வீடியோ : 

https://www.youtube.com/watch?v=bkOM8mKNsvE

No comments:

Post a Comment