Friday, 20 December 2024

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா போட்டிகளில் பங்கேற்க செல்பி எடுத்த மாணவர்கள்  












தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க திருக்குறள் எழுதப்பட்ட இடத்தில் நின்று, 'செல்பி' எடுத்து  அனுப்பினார்கள் .

                          

                    

 கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட வெள்ளி விழா ஆண்டை கொண்டாடும் வகையில், தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் செய்தி துறை சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

                          

                         இதில், மாணவர்களிடம் திருக்குறளை எடுத்துச் செல்லும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுன்றன.


                  அதன்படி, தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்  திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட்டது. 6 வயது வரை உள்ளோர் ஒரு அதிகாரம், 10 வயது வரை உள்ளோர் மூன்று அதிகாரங்கள், 14 வயது வரை உள்ளோர் ஐந்து அதிகாரங்களை ஒப்பு வித்து, அதை வீடியோவாக பதிவு செய்னர் .

                            மேலும், ஓவியம் வரையும் திறமையுள்ள, முதல் ஐந்து வகுப்பு மாணவர்கள், திருவள்ளுவரின் படத்தை வரைந்து , புகைப்படமாக எடுத்தனர்.

                              திருக்குறளின் சிறப்பு குறித்த இப்பள்ளி மாணவ,மாணவியர் கவிதை கூறி அதனை  வீடியோவாக பதிவு செய்தனர்.


                 இளம் வயது  மாணவ,மாணவியர்  தங்கள் பகுதியில் உள்ள  திருக்குறள் எழுதப்பட்ட இடத்தில் நின்று, 'செல்பி' எடுத்தனர்.

   

        

                 மாணவ,மாணவியர் திருக்குறள் ஒப்புவித்த வீடியோக்கள் , திருக்குறளுடன் எடுத்த செல்பி , திருக்குறள் கவிதை வீடியோக்கள், திருக்குறள் ஓவியம் வரைந்த புகைப்படங்கள்   அனைத்தையும் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினார்கள்.


                     இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் முத்துலெட்சுமி,ஸ்ரீதர், முத்துமீனாள் ஆகியோர் செய்து இருந்தனர்.


பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவினை முன்னிட்டு  தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் முத்துலெட்சுமி,ஸ்ரீதர், முத்துமீனாள் ஆகியோர் செய்து இருந்தனர்.


வீடியோ : 

https://www.youtube.com/watch?v=ovxjiRp6sjY


https://www.youtube.com/watch?v=RJi2TZTU0_U




No comments:

Post a Comment