தேசிய அஞ்சல் வாரம்
தேவகோட்டை அஞ்சல் அலுவலகத்தில் தபால் பார்சல் சேவை குறித்து மாணவர்களுக்கு விளக்கம்
தேவகோட்டை – தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு தேவகோட்டை
தலைமை அஞ்சலகத்திற்கு சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்
தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமையில் களபயணம் சென்றனர்.அப்போது அஞ்சல்துறையின் தேவகோட்டை தலைமை தபால் அதிகாரி செல்வராஜ் மாணவர்களை
வரவேற்று மாணவர்களிடம் பேசுகையில்,
அஞ்சல் மற்றும் பார்சல் என்பது வாடிக்கையாளர்களுக்கு
நல்ல உதவியாக இருக்கும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பார்சல் சேவை மிக குறைந்த செலவில் அனுப்பலாம். அனைத்து தபால் பெட்டிகள் மின்னணு செயலாக்கத்திற்கு
மாற்றப்பட்டு உள்ளதையும் விளக்கினார்.
வெளிநாட்டு
பார்சல் அனுப்புவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது என்றும், அந்தமானுக்கு அனுப்பவேண்டிய பார்சல் தொடர்பாக முழு
விவரங்கள் வழங்கப்பட்டது.
அஞ்சல் துறையின் வழியாக அனுப்பும் தபால்களுக்கு
மட்டுமே பொறுப்பு உண்டு. மிகவும் குறைவான கட்டணத்தில்
வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்புவது அஞ்சலகத்தில் மூலம் மட்டுமே இயலும் .அஞ்சலகத்தில் மூலமாக அனுப்பப்படும் பார்சல்கள் மிகக்
குறைவான நாட்களில் வெளிநாடுகளை சென்று அடையும்.
பட விளக்கம் : தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு தேவகோட்டை அஞ்சலகத்துக்கு களப்பயணம் சென்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு தேவகோட்டை தலைமை தபால் அதிகாரி செல்வராஜ் அஞ்சலக அலுவலக நடைமுறைகள் குறித்து விளக்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துலெட்சுமி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.
மாணவர்களிடம் பல்வேறு
கேள்விகள் கேட்டு பதில் கூறிய மாணவர்களுக்கு பரிசுகள்
வழங்கப்பட்டது. ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார். மாணவர்களை அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் ஸ்ரீதர் செய்து இருந்தார்.
பட விளக்கம் : தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு தேவகோட்டை அஞ்சலகத்துக்கு களப்பயணம் சென்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு தேவகோட்டை தலைமை தபால் அதிகாரி செல்வராஜ் அஞ்சலக அலுவலக நடைமுறைகள் குறித்து விளக்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துலெட்சுமி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.
No comments:
Post a Comment