Saturday, 12 October 2024

  மனதுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்  அடர்ந்த காடுகள் உள்ள சைலன்ட் வேலி 

அட்டை பூச்சி கடித்தால் இதய நோய் , வெர்னி கோஸ் நோய் பாதிப்பு குறையுமா? கைடு கூறிய புதிய தகவல்கள் 

250 ஆண்டுகள் பழமையான முத்தச்சி பிலவு 

மறக்க முடியாத அனுபவத்தை ஏற்படுத்திய குந்தி ஆறு 

பச்சை பாம்பை தீடீரென பார்த்த அனுபவம் 

சைலன்ட் வேலியில் 5 மணி நேர பயண அனுபவம் 

கேரளா டூர் நாள் - 4 மற்றும் நாள் - 5




















                       கேரளா மாநிலம்  வயநாடு துஷாராகிரி அருவியிலிருந்து  மீண்டும் நாங்கள் அடிவாரம்  வழியாக பாண்டி காடு தாண்டி  மன்னார்காடு அடைந்தோம்.

                                          மன்னார்காடில்  ஏற்கனவே திசைகள் பவித்ரா அவர்கள் மாமா நவநீதன் கூறியபடி நியூ கேட்வேய்  என்கிற ஹோட்டலில் அறை எடுத்து தங்கினோம்.

                              மன்னர்காட்டில்  நாங்கள் இரவு உணவு அருந்த செல்லும் போது  வெஜ்   ஓட்டலுக்கு தேடி கண்டுபிடித்து சென்றால் ஒன்பது மணிக்கு டிபன் முடிந்துவிட்டது .ஒன்பது முப்பதுக்கு வந்துள்ளீர்கள் அருகிலுள்ள ஹோட்டலுக்கு செல்லுங்கள் என்று கடை ஓனர் தெரிவித்தார். 

                               நாங்கள் சிறிது தூரத்தில் அவர் கூறிய ஸ்ரீதர் என்கிற ஓட்டலுக்கு சரியாக 10 மணிக்கு சென்றால் அங்கேயும் விளக்குகளை அணைக்க ஆரம்பித்தார்கள். அவசர, அவசரமாக சென்று தோசை இருக்கிறதா என்று கேட்டோம்? இருக்கிறது என்று கூறினார்கள்.

                             ஸ்ரீதர் ஹோட்டலில் தோசை (சாப்பிட்டுவிட்டு) நன்றாகத்தான் இருந்தது. அங்கிருந்து கிளம்பி அறைக்கு வந்தோம். ரூம் அறை  நல்ல முறையில் எங்களுக்கு உதவியாக இருந்தது. அறையில் பல்வேறு வசதிகளும் நல்ல முறையில் இருந்தது.

                                மறுநாள் காலையில் ( டூரின் 5ம் நாள் )  மன்னர்காட்டில் விருந்தன்  ஹோட்டலில் காலை உணவை முடித்துக்கொண்டு அங்கிருந்து சைலன்ட் வேலி நோக்கி பயணமானோம்.

                               மன்னர்காட்டில் இருந்து சைலன்ட் வேலி செல்லும் அலுவலகம் அமைந்துள்ள முக்காலி சுமார் 20 கிலோமீட்டர் தூரம்.

                                     .நாங்கள் மன்னர்கட்டில் இருந்து கிளம்பிய பிருகு சில கிலோமீட்டர் தூரம் சாலை வசதி நன்றாக இருந்தது. ஆனால்  மேலே,மேலே செல்ல, மலை,மலை ஏற ,ஏற சாலை மிகவும் சுமாராக இருந்தது.

                                                   ஹர்பின் பெண்ட் எல்லாம் கடந்து, பச்சை, பசேல் என்கிற மலை பகுதியை ரசித்துக்கொண்டே சென்று  முக்காளி என்ற இடத்தில் அமைந்துள்ள சைலன்ட் வேலி செல்லும் வனச்சரக அலுவலகத்தை  சென்றடைந்தோம் .

                                      எட்டு  முப்பது மணிக்கு காலையில் கிளம்பி ஒன்பது முப்பது மணிக்கு சென்று அடைந்தோம்.

                                            பொதுவாக சைலன்ட் வேலி அலுவலகத்துக்கு காலை 8.15 மணிக்கு சென்றால் பஸ் மூலம் 23 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அடர்ந்த காட்டு பகுதிக்கு செல்ல  ஒரு நபருக்கு சுமார் 600 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள்.

                                காலை 9 மணிக்கு பின்பு நாம் சென்றால் தனி ஜீப்தான் எடுத்து செல்ல வேண்டும்.ஒரு ஜீப்பில் மூவர் செல்ல 2300 ரூபாய் ஆகும்.

                                               ஐந்து பேர் இணைந்து ஜீப்பில் சென்றால் 3300 ரூபாய் கொடுக்க வேண்டும்.  ஒன்பது முப்பது மணிக்கு பிறகு நாங்கள் சென்றதால் ஒரு ஜீப் இன் மூலம் ஷாஜு என்கிற  டிரைவர் எங்களை சுமார் இருபத்தி மூன்று கிலோமீட்டர் இருக்கக்கூடிய  சைலன்ட் வேலி அடர் வனத்திற்கு  அழைத்துச் சென்றார்.

                                          மிக உயரமான , ஆழமான , அடர்த்தியான காடுகள் உள்ள  மலைப் பகுதியின் நடுவே ஒற்றை வழித்தடத்தில் மிக அழகாக பல்வேறு தகவல்களை எடுத்து கூறி ஷாஜு அவர்கள் எங்களை அழைத்து சென்றார்கள்.

                                       ஷாஜு  அவர்கள் நம்மிடம் கூறும்போது பவானி , குந்தி  என்கிற இரு ஆறுகள் இருக்கின்றது. நாம் செல்லும் வழியை சைலன்ட் வேலி என்று சொல்லக் கூடாது. சைலேந்தரி  வனம் என்று தான் கூற வேண்டும் என்று கூறினார். வனத்தை நாம் பாசமாக நேசிக்க வேண்டும் என்று கூறினார்.

                     

                          வனத்தின் நடுவே எங்களை அழைத்துச் சென்ற போது , வனத்தில் முதலாவதாக சாதாரண காடு இருக்கிறது என்றும், இரண்டாவதாக செமி  காடுகள் இருக்கிறது என்றும், மூன்றாவதாக பச்சை பசேலென்று காட்டு மரங்கள் இருப்பதாகவும் தெளிவாக எடுத்துக் கூறினார்.

                                           காடுகளை  நாம் நேசிக்க வேண்டும், சுவாசிக்க வேண்டும் என்று கூறினார். நாம் மனம் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டுமென்றால் மழைக்காடுகள் என்று உச்சரிக்க வேண்டும் என்று கூறினார்.

                                       ஜீப்பில் மேலே செல்ல ,செல்ல  இயற்கை ஏ .சி. நம்மை சுற்றி சூழ்ந்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார். மிக அருமையான தகவல்களை எடுத்துக் கூறினார்.

                                        எமரால்டு பறவை பறந்ததை எடுத்து காட்டியும்,பல்வேறு விதமான, பல ஆண்டுகளான மரங்களைப் பற்றியும் எங்களுக்கு எடுத்துரைத்தார். அடர்ந்த காடுகளின் வழியில் செல்லும் வழிகளை எல்லாம் எங்களுக்கு விளக்கமாகக் கூறி விளக்கினார்.

                                            கல்தாமரை என்கிறமலையில் கல்லில்  பூக்க கூடிய  பூக்களைப் பற்றியும் எங்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறினார். 

                              அடர்ந்த காடுகளின் வழியாக செல்லும்போது அருவிகளில் தண்ணீர் கொட்டுவதையும், ஆங்காங்கே ஆதி வாசிகள் குடியிருக்க கூடிய பகுதிகளையும் விளக்கமாக எடுத்துக் கூறினார்.

                             பதினைந்திலிருந்து இருபது பேர் காட்டிற்குள் வந்தால் இரண்டு நாட்கள் தங்குவதற்கு ஒரு நபருக்கு ரூபாய் 3000ம், தங்குமிடம், சாப்பாடு அனைத்தும் சேர்த்து வனத்துறையினர் ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

                                    வனத்தின் உள்ளே ரூம்களில் தங்க  நேரடியாக வன  அலுவலகத்தை  நாம் தொடர்பு கொள்ளலாம் என்று வன அலுவலர் சண்முகம் எங்களிடம் தகவல் தெரிவித்தார்.

                                    அடர்ந்த வனத்தின் உள்ளே   பல இடங்களிலும் போட்டோக்கள் எடுத்துக் கொண்டோம் . ஆங்காங்கே  பாதுகாப்பான இடங்களில் வாகனத்தை நிறுத்தி இயற்கையை ரசித்தோம்.சிங்கவால் குரங்குகளை பார்த்தோம்.

                                    இயற்கையை ரசிக்க நாம் வனத்தின் நடுவே கீழே இறங்கும்போது மிகவும் எச்சரிக்கையாக இறங்க வேண்டும். ஏனெனில் மழைக்காலமாக இருப்பதால் அட்டை பூச்சி அதிகமாக உள்ளது.

                                  அட்டை பூச்சி கடித்தால் நல்லது என்று ஷாஜு எங்களிடம் கூறினார். அட்டை பூச்சி கடிப்பதால் இதய அடைப்பு நோய்  வராது  என்றும், வெர்னி கோஸ் போன்ற நோய்கள் வராது என்றும் கூறினார்.இதனையே வனவர் சண்முகம் அவர்களும் எங்களிடம் கூறினார்.

                                         இருந்தாலும் நாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.நாங்கள் எச்சரிக்கையாக இருந்தபோதும் எனது மகனை அட்டை பூச்சி கடித்து ரத்தத்தை உறிஞ்சி விட்டு மயங்கி விட்டது. அதன் பிறகு அதனை காலில் இருந்து எடுத்து கீழே தூக்கி போட்டோம்.

                                        அட்டை பூச்சி கடித்ததால்  ரத்தம் வந்த இடம் பெரியதாகத்தான் இருந்தது. ஆனாலும் அது ஒன்றும் செய்யாது  என்று ஷாஜு எங்களுக்கு நம்பிக்கை அளித்தார். அதனால் நாங்களும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.அது சில மணி நேரங்களில் சரியாகி விட்டது. 

                             250 ஆண்டுகளுக்கும் மேலான பலா மரம் ஒன்றை நாங்கள் பார்த்தோம். அதற்கு பெயர் பாட்டி பலா என்று தமிழிலும், மலையாளத்தில்  முத்தச்சி பலவு  என்று எங்களிடம் தெளிவாக கூறினார்.

                                     அங்கிருந்து நாங்கள் பச்சை பசேலென்ற அடர்ந்த மழைக்காடுகளில் வழியாக இயற்கையை ரசித்துக்கொண்டே, அனுபவித்துக்கொண்டே சைலன்ட் வேலி தேசிய பார்க்  இருக்கும் இடத்திற்கு சென்றோம்.

                                 அங்கு முதலில் நம்மை உயரமான டவ்ர் தான் வரவேற்கிறது. டவரின் மேலே ஏறி அடர்ந்த காட்டின்  பல்வேறு தூரங்களை  நாங்கள் பார்த்தோம்.

                                    கேரள  அரசு பள்ளியில்  இருந்து ஏராளமான மாணவர்கள் கள  பயணமாக வந்திருந்தனர். கேரள அரசு,  அரசு பள்ளி மாணவர்களை களப்பயணம் செல்ல  வழிமுறைகளை செய்து கொடுத்துள்ளது.

                                          தமிழக அரசில் , அரசு பள்ளி மாணவர்கள் அது போன்று களப்பயணம் செல்ல அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

                                 டவ்ர் உள்ள இடத்தில் நம்முடன் நமது வாகன ஓட்டுநர் மேலே வந்து நமக்கு விளக்கம் சொல்ல வேண்டும். மேலும் அங்கேயே ஒரு வன அலுவலரும் நமக்கு விவரங்கள் சொல்லவும், பாதுகாப்பாக ஏற , இறங்கவும் உதவி செய்கின்றனர். 

                                              டவெரில்  ஏறுவது மிகவும் சிரமாக இருக்கும். ஆனால்  ஏறிய பிறகு பார்த்தால் மிக நல்ல இடமாக இருக்கும். இறங்கும்போதுதான் கவனமாக இறங்க வேண்டும்.

                                      

                                       அடர்ந்த காட்டின் நடுவே உள்ள காடுகளை நல்ல முறையில் பார்வையிட்டு , மேலும் அங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள குந்தி ஆற்றை  பார்ப்பதற்காக எனது மனைவி மற்றும் மகனுடன் செல்ல ஆரம்பித்தோம்.

                                            குந்தி ஆறு பார்க்க   செல்லும் வழி நெடுகிலும் அட்டை பூச்சி அதிகம் உள்ளது.குந்தி ஆறு பார்க்க செல்லும்போது    ஷாஜி அவர்களும் உதவிக்கு வந்திருந்தார்கள். எனது மனைவியால் சிறிது தூரத்திற்கு மேல் இறங்க இயலவில்லை. 

                                       எனது மனைவியால் மேலும் கீழே இறங்க சிரமப்பட்டதால்,  அதே இடத்தில் இருக்குமாறு கூறினோம். இருந்தாலும் பரவாயில்லை மெதுவாக செல்கிறேன் என்று கூறினார்கள். சரி என்று சென்று நாங்கள் குந்தி ஆற்றை பார்க்க இறங்கி விட்டோம்.

                                      ஆனால் நாங்கள் மீண்டும் ஏறி வரும் போது எனது மனைவி மற்றும் மகனை  கண்டுபிடிக்க இயல்வது கொஞ்சம் சிரமமாக இருந்தது. அவர்கள் இன்னொரு பாதையின் வழியாக அடர்ந்த காட்டுக்குள் சென்று விட்டார்கள்.

                             மீண்டும்  அவர்களை கண்டுபிடித்து, நேராக நாங்கள் இருக்கும் இடத்தின் வழியாகவே வந்து விட்டார்கள். அந்த சில நிமிடங்கள் எங்களுக்கு மிகவும் பரபரப்பாக இருந்தது.  படபடப்பாகவும் இருந்தது.

                                  இந்த நிலையில் நாங்கள் நான்கு பேரும் மீண்டும் மேலே வந்து வாகனத்தில் மூலமாக சைலன்ட் வேலியில்  மதியம் 1.30 மணிக்கு கிளம்பி மதியம் 2 40 மணி அளவில் முக்காளி அலுவலகத்தை வந்து அடைந்தோம்.

                                முக்காலியில் அரசு அமைத்துள்ள கடையில்  தேன் மற்றும் பல்வேறு விதமான வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிக்கொண்டு, ஷாஜு அவர்களுக்கும் நன்றி சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்ப தயாரானோம்.

                                      ஜீப்போ அல்லது பஸ்ஸோ நாம் முக்காலி அலுவலகத்தில் இருந்து கிளம்பியதில் இருந்து 5 மணி நேரம் நம்முடன் பயணிக்க வேண்டும்.

                           வாச் டவ்ர் இருக்கும் இடத்தில் நீங்கள் நன்றாக அமர்ந்து இயற்கையை ரசித்து , அங்குள்ள தேனீர் கடையில் தேநீர் சாப்பிட்டு  ஓய்வு எடுத்து விட்டு வரலாம். 


                              நாங்கள் செல்லும்போது தேநீர் கடைக்கு அருகில் உள்ள வனச்சரக அலுவலகத்தில் , அழகாக அமைந்துள்ள புல் வெளியில் பச்சை பாம்பு ஒன்று தீடீர்ன்னு தலையை நீட்டிக்கொண்டு நின்றது. 

                                              எனவே  அடர்ந்த காட்டு பகுதியில்,புல்வெளிதானே என்று கையை நீட்டிக்கொண்டு செல்லாமல், மிக கவனமாக நாம் செல்ல வேண்டும் என்பது எங்களது அனுபவம்.

                                                   சைலன்ட் வேலி சென்ற அனுபவம் எங்களுக்கு மறக்கமுடியாத அனுபவமாக மாறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

                                    அடர்ந்த காட்டின் வழியே நாங்கள் சென்ற பயணம் எங்களுக்கு மிகவும் பிடித்து இருந்தது.வழியில் வேறு எதுவும் கிடைக்காது என்பதால் சாப்பிட உள்ள பொருள்களை நம்முடன் எடுத்து சென்று விடுவது நல்லது.


                                       சாஜு அவர்களின் நல்ல தகவலுடன் அகலியை சார்ந்த தோழர் ரமேஷ் அவர்களின் ஆலோசனையின் படி அடுத்ததாக ஒரு அருமையான இடம் பார்க்க கிளம்பினோம்.


பயணம் தொடரும்.


லெட்சுமணன் 

காரைக்குடி 


வீடியோ : 

https://www.youtube.com/watch?v=aIG06Qki64o

https://www.youtube.com/watch?v=JHKAYbElkb0

https://www.youtube.com/watch?v=91cvxeLkS7g

https://www.youtube.com/watch?v=I-GXIsp8s5Y


No comments:

Post a Comment