Wednesday, 23 October 2024


வாழ்க்கை முழுவதும் வாசிக்க  வேண்டும் - வட்டார வளமைய மேற்பார்வையாளர் பேச்சு 

 படிக்க புத்தகம் கொடுத்து  பரிசும் வழங்கிய பள்ளி 














தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கோடை விடுமுறையில் நூலக புத்தகம் படித்த  மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

 
                                 இப்பள்ளியில் முதல் பருவ   விடுமுறையை  பயனுள்ளதாக மாற்றும் வகையில் ஒவ்வொரு மாணவரும் படிக்கும் வகையில் மாணவர்களின் வீட்டுக்கு நான்கு ,நான்கு புத்தகங்கள் கொடுக்கப்பட்டது. கோடை விடுமுறையில் புத்தகங்கள் படித்து வந்து, அதனை நல்ல முறையில் வெளிப்படுத்தி பேசிய மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

                                            ஆசிரியர்  ஸ்ரீதர்  வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை  வட்டார வள மைய மேற்பார்வையாளர் கார்த்திகேயன்  மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசுகையில் , வாழ்க்கை முழுவதும் படிக்கச் வேண்டும். புத்தகங்கள் தான் நமக்கு நல்ல மனிதர்களை காண்பிக்கும். புத்தகம் வாசித்தால் வெற்றி உறுதி. பள்ளி  விடுமுறையில் புத்தகங்கள் வழங்கி , வாசிக்க செய்து பரிசு வழங்கியது இங்குதான் பார்க்கின்றேன். வாழ்த்துகள்.என்று பேசினார்.

                             சிறந்த முறையில் புத்தகங்கள் வாசித்த மாணவர்கள் ஏஞ்சல் ஜாய் , சுபிக்ஷன், நந்தனா, ரித்திகா,நிடியா ,ஹாசினி ஆகியோருக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கோடை விடுமுறையில் நூலக புத்தகம் படித்த  மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.தேவகோட்டை வட்டார வள மைய மேற்பார்வையாளர் கார்த்திகேயன்  மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் . தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

 

 

வீடியோ : https://www.youtube.com/watch?v=2TeEwVvYcWo

No comments:

Post a Comment