Monday, 21 October 2024

இந்திய காவலர் நினைவு தினம் 

சமுதாயத்தில் காவலர்களின் பங்கு 

பேச்சு போட்டி, ஓவிய போட்டி, கலை நிகழ்ச்சிகள் மூலம் காவலர்களின் பணிகளை நினைவு கூர்ந்த மாணவர்கள் 








தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய காவலர் நினைவு தின நிகழ்வு நடைபெற்றது. 

                                      

                                          பல காவல்துறை அதிகாரிகள் நாடு முழுவதும் தங்கள் பணியின் போது உயிரிழந்துள்ளனர்.அவர்களை நினைவு கூறும் வகையில் நாடு முழுவதும் காவலர் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

                                  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற காவலர் நினைவு தின  நிகழ்வுக்கு பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் பாண்டியன் மற்றும் சார்பு ஆய்வாளர் கலா ஆகியோர் சமுதாயத்தில் காவலர்களின் பங்கு என்பது தொடர்பாக சிறப்புரையாற்றிபேசுகையில் , 

                                நமது வாழ்வில் ஒரு பிரச்சனையோ, வாக்குவாதமோ  அல்லது மோதல் ஏற்படும் சூழ்நிலையில் உடனே போலீசைக் கூப்பிடவா? இல்லை நீ போலீசுக்கு போன் பண்ணு என சொல்வது வழக்கம்.

                                    நாடு முழுவதும் காவல் துறையினர் சட்டம் ஒழுங்கு குற்றத்தடுப்பு மற்றும் குற்றம் கண்டுபிடித்தல்  ஆகிய அவசியமான பணிகளில் இரவு பகல் பாராமல் உழைத்து சமூகத்தில் அமைதியை காத்து வருகின்றனர்.

                               

                                          வருடாவருடம் உள்ளூர் காவல், உள்நாட்டு காவல்,. எல்லை காவல் படை உள்ளிட்ட பல காவல் பணிகளில் உயிர் தியாகம் செய்தவர்களைப் போற்றும் வகையில் காவலர் நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.என்று பேசினார்கள்.

                                  இந்நிகழ்வில் காவலர் நினைவு தினம் தொடர்பாக நடனம், பாட்டு, பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் காவலர் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்றது. 

                          இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துலெட்சுமி,முத்து மீனாள் ஆகியோர் செய்து இருந்தனர்.


பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய காவலர் நினைவு தின நிகழ்வு நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் பாண்டியன் மற்றும் சார்பு ஆய்வாளர் கலா ஆகியோர் சமுதாயத்தில் காவலர்களின் பங்கு என்பது தொடர்பாக சிறப்புரையாற்றினார்கள் .இந்நிகழ்வில் காவலர் நினைவு தினம் தொடர்பாக நடனம், பாட்டு, பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் காவலர் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்றது.


வீடியோ : 

https://www.youtube.com/watch?v=kh0gN6RP_BE

https://www.youtube.com/watch?v=y35SihJl9_w



No comments:

Post a Comment