Tuesday, 29 October 2024

 மருத்துவ  முகாம் 

மழைக் காலத்தில்  நோய்கள் தாக்காமல் பாதுகாப்பாக இருப்பது எப்படி?


மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும் 

நீங்களாக கடைகளில் மாத்திரைகள் வாங்கி சாப்பிட வேண்டாம் 

அரசு மருத்துவர் பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை 

 அரசின் பள்ளி  மாணவர்களுக்கான நலவாழ்வு திட்ட   முகாம் 














 தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அரசின் பள்ளி  மாணவர்களுக்கான நலவாழ்வு திட்ட மருத்துவ  முகாம் நடை பெற்றது.

                                     முகாமிற்கு வந்திருந்தோரை ஆசிரியை முத்துலெட்சுமி  வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.கண்ணங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கணபதி  சீத்தாராமன் மற்றும் யாழினி  ஆகியோர் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களின் உடல்களையும் பரிசோதித்தனர்.முகாமிற்கான ஏற்பாடுகளை  செவிலியர் உமாமகேஸ்வரி ,  மருந்தாளுனர்கள் சிவகுமார்,கனிமொழி ஆகியோர் செய்து இருந்தனர்.

                         மாணவர்களிடம் உடல் சார்ந்த நோய்களை கண்டுபிடித்து அவற்றை உடனுக்குடன் எடுத்து கூறினார்கள்.மேலும் சில நோய்களுக்கு மேல் சிகிச்சைக்காக மாவட்ட அளவிலான அரசு மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரைத்தனர்.

                             மாணவர்களின் பெற்றோர்களுக்கும் நோய்களின் தீவிரம் குறித்து எடுத்த சொல்லப்பட்டது.பொதுவாக பல் சம்பந்தமான நோய்கள்,விட்டமின் குறைபாடு தொடர்பான நோய்கள்,தைராய்டு தொடர்பான தகவல்கள் அவற்றை எவ்வாறு சிறு வயது முதலே சரி செய்வது,நோய் வருமுன் காப்பது என்பன போன்ற பல்வேறு உடல் நோய்கள் தொடர்பான தகவல்கள் எடுத்து சொல்லபட்டது.முகாமின் நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர்  நன்றி கூறினார்.

 

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்  அரசின் பள்ளி  மாணவர்களுக்கான நலவாழ்வு திட்ட மருத்துவ  முகாம் நடை பெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.கண்ணங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கணபதி  சீத்தாராமன் மற்றும் யாழினி  ஆகியோர் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களின் உடல்களையும் பரிசோதித்தனர்.முகாமிற்கான ஏற்பாடுகளை  செவிலியர் உமாமகேஸ்வரி ,  மருந்தாளுனர்கள் சிவகுமார்,கனிமொழி ஆகியோர் செய்து இருந்தனர்.


வீடியோ : 

https://www.youtube.com/watch?v=n7GBMvOQH8Y




மேலும் விரிவாக : 

                              மழைக்காலங்களில் நாம் எவ்வாறு முன்னெச்செரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பது குறித்து மாணவர்களிடம் மருத்துவர்கள் பேசுகையில், மழைக்காலங்களில் சூடாக தண்ணீர் குடிக்க வேண்டும் .சூடானவற்றையே சாப்பிட வேண்டும். 

                    இரவு நேரங்களில் கொசுக்கடிக்காமல் இருக்க  படுக்கும் பொழுது தேங்காய் எண்ணெயை தடவிக் கொள்ள வேண்டும் . நம் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

                              வீடுகளில்  பிரிட்ஜ் பின்பாக தண்ணீர் இருந்தால் அதனை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். குப்பைகளை சேர்க்கக்கூடாது.

                    கடலை மிட்டாய், கடலை உருண்டை, பேரிச்சம்பழம் போன்று இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை  அதிகமாக சாப்பிட வேண்டும்.

                             காய்கறி சூப் முடிந்த அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.விலை குறைவாக இலவசமாக கிடைக்கக்கூடிய முருங்கைக்கீரையில் சூப் குடிக்க வேண்டும்.

                         தொண்டை வலி வந்தால் வென்னீரில் கல் உப்பு கலந்து அவ்வப்போது கொப்பளித்து துப்ப வேண்டும்.

                              இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் நாமாக மாத்திரை சாப்பிடாமல்   மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். 


                  அவ்வப்போது தொடர்ந்து வெந்நீர் குடித்து கொண்டே இருக்க வேண்டும் .வெந்நீர் குடித்தால் பொதுவாக தொண்டை வலி உட்பட பல்வேறு வியாதிகள் சரியாவதற்கு வாய்ப்புகள் உள்ளது.












No comments:

Post a Comment