Saturday, 29 June 2024

 

வங்கிக்கு களப்பயணம்  சென்ற பள்ளி மாணவர்கள் 

 
 வங்கிக்கு மாணவர்களை அழைத்து சென்று வாழ்க்கை கல்வியை கற்று கொடுத்த  பள்ளி

 

 








தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தாழையூர்  பாரத ஸ்டேட் வங்கிக்கு நேரடியாக களப்பயணம் சென்றனர்.
                            வங்கியின் கிளை  மேலாளர் தீனதயாளன்     தலைமை தாங்கினார் . பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.வங்கி அலுவலர்கள்  குரு சுப்ரமணியம் ,கோவிந்தலிங்கம் ஆகியோர்   மாணவர்களுக்கு  செயல்முறை விளக்கம் அளித்தார்.வங்கியின் செயல்பாடுகள் என்ன,என்ன என்பது குறித்து விளக்கப்பட்டது.வங்கியில் பொதுமக்கள்
 பயன்பாடும்,பொதுமக்களுக்கு வங்கியின் சேவை குறித்தும் எடுத்து கூறினார்.வங்கியில் அமைந்து உள்ள ஒவ்வொரு பிரிவையும் தனித்தனியே மாணவர்களை அழைத்து சென்று விளக்கம் அளித்தார்.பணம் செலுத்தும் படிவம்,பணம் எடுக்கும் படிவம்,காசோலை எடுக்கும் படிவம்,நகை கடன் செலுத்துவது , செலுத்திய பணத்தை எடுப்பது , ஏ டி எம் இயந்திரத்தினை பயன்படுத்துவது எவ்வாறு  என்பதை செய்து காண்பித்து விளக்கமாக எடுத்து கூறினார்.எ .டி .எம்.அட்டை தொடர்பாக யார் எந்த தகவல் கேட்டாலும் சொல்ல வேண்டாம் என்று விளக்கி சொன்னார்கள். எ .டி .எம்.அட்டை தொலைந்து போனால் 18001234 மற்றும் 18002100 என்று எண்ணுக்கு தகவல் சொல்லுங்கள்.இவ்வாறு பல்வேறு தகவல்களை விரிவாக விளக்கினார்கள்.வங்கி மேலாளரிடம் மாணவர்கள் சந்தேகங்கள்  கேட்டு பதில்கள் பெற்றனர்.
                                     

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம்  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் ஏற்பாட்டில் பாரத ஸ்டேட் வங்கிக்கு நேரடியாக களப்பயணம் சென்றபோது வங்கியின்  மேலாளர் தீனதயாளன்   தலைமையில் வங்கி அலுவலர்கள் குரு சுப்ரமணியம், கோவிந்தலிங்கம்  ஆகியோர் மாணவர்களுக்கு வங்கி தொடர்பாக விரிவாக விளக்கினார்.


வீடியோ : 
https://www.youtube.com/watch?v=ZKHCIIW8xdY&t=4s

No comments:

Post a Comment