Monday, 10 June 2024

திறக்கப்பட்ட பள்ளிகள்; மாணவர்களுக்கு ஆரத்தி எடுத்த ஆசிரியர்கள்







 

 தேவகோட்டை - தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 1முதல் 5-ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால், மாணவ, மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.பள்ளி ஆசிரியர்கள் புதியதாக சேர்ந்த  மாணவர்களுக்கு  ஆரத்தி எடுத்து மாலை ,ரோஜா பூ , கடலை மிட்டாய் வழங்கி வரவேற்றனர்.

                  

                               சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புதியதாக சேர்ந்த மாணவர்களுக்கு ஆரத்தி எடுத்து மாலை, ரோஜா பூ, பூங்கொத்து, கடலை மிட்டாய்  கொடுத்து மாணவ,மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம், ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துலெட்சுமி,முத்து மீனாள்  ஆகியோர் வரவேற்றனர்..

                                        இந்நிகழ்வுகளில் ஏராளமான பெற்றோர்கள் உட்பட பொதுமக்களும் பங்கு பெற்றனர். இளம் வயது மாணவர்கள் பள்ளிக்கு மிகுந்த ஆர்வத்துடன் , புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள மகிழ்ச்சியான முகத்துடன் வருகை தந்தனர்.

                                                                 இளம் வயது மாணவர்கள் சிலர் ஆர்வமுடன் பள்ளிக்கு புதியதாக வந்தனர். சில முதல் வகுப்பு மாணவர்கள்  முதல் முறை பள்ளிக்கு வருவதால் சிறிது நேரம் அழுதுகொண்டே வந்தனர்.பிறகு ஆசிரியர்கள் சமதானப்படுத்தி, மற்ற குழந்தைகளுடன் பழகி மகிழ்ச்சியாக பள்ளிசெயல்பாடுகளில் ஈடுபட்டனர்.


பட விளக்கம் :  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்  ஆசிரியர்கள் பள்ளியில் புதியதாக சேர்ந்த  இளம் வயது மாணவர்களுக்கு ஆரத்தி எடுத்து  மாலை ,ரோஜா பூ , கடலை மிட்டாய் வழங்கி வரவேற்றனர்.

 

வீடியோ : 

 https://www.youtube.com/watch?v=Rz3Jvnnrkf0

 

 


 


No comments:

Post a Comment