வீடு, வீடாக சென்று மாணவர்கள் சேர்க்கை
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வீடு, வீடாக சென்று மாணவர்களை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தினார்கள்.
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வரும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற்றோர்களுக்கு எடுத்துக் கூறினார்கள்.
பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துமீனாள், முத்துலட்சுமி உட்பட ஆசிரியர்கள் அனைவரும் பள்ளி குடியிருப்பு பகுதி முழுவதும் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று பல்வேறு தகவல்களை எடுத்துக்கூறி சேர்க்கையை வலியுறுத்தி பேசினார்கள்.
பள்ளியின் சிறப்புகளையும் தெளிவாக எடுத்துக் கூறி அரசு வழங்கும் நலத் திட்டங்களின் மூலமாக மாணவர்களுக்கு கிடைக்கும் நன்மைகளையும் தெளிவாக கூறினார்கள்.
இன்றைய சூழ்நிலையில் மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள், வண்ண கலர் பென்சில்கள், ஜாமென்ட்ரி பாக்ஸ் என அனைத்து விதமான கல்வி தொடர்பான உதவிகளும் விலையில்லாமல் கிடைப்பதை தெளிவாக பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் எடுத்துக்கூறி மாணவர்களை பள்ளியில் சேர்க்குமாறு விளக்கிக் கூறினார்கள்.
படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் குடியிருப்புப் பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி பேசினார்கள். தமிழக அரசு மாணவர்களுக்கு கல்வி தொடர்பாக வழங்கக்கூடிய விலையில்லா பொருட்கள் தொடர்பான தகவல்களையும் பெற்றோர்களுக்கு எடுத்துக்கூறினார்கள்.
No comments:
Post a Comment