Wednesday, 26 June 2024

 

உணவில்  கலப்படம் கண்டறிதல் எப்படி?

உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

வண்ணங்கள் அதிகம் கலந்த உணவினை சாப்பிட வேண்டாம் 

காலாவதியான பொருள்களை தவிர்த்து விடுங்கள் 

 உணவு பாதுகாப்பு அலுவலர் அறிவுரை 

 







 தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உணவில் கலப்படம் கண்டறிதல் எப்படி என்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
                                              ஆசிரியை முத்துலெட்சுமி  வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை    நகராட்சி  உணவு பாதுகாப்பு  அலுவலர் சிவக்குமார் உணவு பொருள்களில் உள்ள கலப்படங்களை கண்டறிதல் எப்படி என்பது தொடர்பான விழிப்புணர்வை   மாணவர்களுக்கு  எளிதாக புரியுமாறு விளக்கி கூறினார்.வண்ணங்கள் கலந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்.காலாவதியான பொருள்களை கண்டுபிடித்து தவிர்த்து விடுங்கள். உணவு கலப்படம் தொடர்பாக புகார்களை 9444042322 என்கிற எண்ணிற்கு கட்செவி மூலம் அனுப்பலாம் என்றும் தெரிவித்தார்.கலப்படம் தொடர்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.நிகழ்வில் டீ தூள் கலப்படம்  கண்டறிதல், வெல்லம் கலப்படம், தேன் மிட்டாய் கலப்படம் என பல விவரங்கள் நேரடியாக விளக்கப்பட்டது. நிகழ்வில் தேவகோட்டை நகராட்சி உணவு பாதுகாப்பு பிரிவு  உதவியாளர்கள் ஜான்,கருப்பையா , பாலமுருகன்,ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர்  நன்றி கூறினார்.

 
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம்  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை    நகராட்சி  உணவு பாதுகாப்பு  அலுவலர் சிவக்குமார்  உணவு பொருள்களில் உள்ள கலப்படங்களை கண்டறிதல் எப்படி என்பது தொடர்பான விழிப்புணர்வை  மாணவர்களுக்கு  எளிதாக புரியுமாறு விளக்கி கூறினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.



வீடியோ : https://www.youtube.com/watch?v=kRNLc-Zx2TY

https://www.youtube.com/watch?v=pzA-ah7UnN8


 

No comments:

Post a Comment