Friday, 14 June 2024

 குழந்தைகள் பாதுகாப்பு குறித்து  விழிப்புணர்வு 

 







 

தேவகோட்டை - பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது 

                                    சிவகங்கை மாவட்ட சமூக நலத்துறை , அழகப்பா பல்கலை சமூகவியல் துறை மற்றும் தேவகோட்டை காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

                                இதற்கு பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். 

                          தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமை காவலர் ராணி , சமூக நலத்துறை அலுவலர் ஜூலி ஆகியோர் கலந்துகொண்டு  குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பது, பொது இடங்களில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாலியல் ரீதியாக ஏற்படும் தொல்லைகள், படிப்பை பாதியில் நிறுத்திய குழந்தைகள் மீண்டும் படிப்பைத் தொடர்வது ,பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

                               ஏதேனும் அவசர உதவியை பெற பள்ளி மாணவ மாணவிகள் 181, 1098 , 1930 ஆகிய கட்டணமில்லா உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம். இதனை தொடர்ந்து பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர் . முன்னதாக ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.

                             நிகழ்வில் சிவகங்கை மாவட்ட ஆல் தி சில்ட்ரன்  ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திர பிரபு ,  சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சர்வேஸ்வரன் ,அழகப்பா பல்கலைக்கழக சமூகவியல் துறை மாணவிகள் ஜோதி மீனாட்சி, ராஜேஸ்வரி, காவியா, அபர்ணா,  பிரியதர்ஷினி உட்பட பலர் பங்கேற்றனர்.

 

பட விளக்கம் :  சிவகங்கை மாவட்ட சமூக நலத்துறை , அழகப்பா பல்கலை சமூகவியல் துறை மற்றும் தேவகோட்டை காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

 

 

வீடியோ :  https://www.youtube.com/watch?v=l6J-GvJAUxU

No comments:

Post a Comment