தேசிய அறிவியல் தின விழா
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின நிகழ்வு கொண்டாடப்பட்டது.
நிகழ்வில் ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை
தாங்கினார்.முருகப்பா அறக்கட்டளை பயிற்சியாளர்கள் அரங்குவளன் மற்றும் ஜெய்கணேஷ் ஆகியோர் மாணவர்களுக்கு சோதனைகளை செய்து காண்பித்து விளக்கினார்கள்.பறக்கும் யானை,தராசு,காற்றின் அழுத்தம்,மடிக்கணினி,நீரின்
அடர்த்தி,வெப்ப சலனம்,ஊசி துளை கேமிரா,ஒளியின் பாதை,நீர் பாயும் தன்மை
போன்ற அறிவியல் சோதனைகளை நேரடியாக மாணவர்களே செய்து காண்பித்து விளக்கம்
அளித்தனர்.நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஆசிரியை முத்துமீனாள் ,பாரதி செய்து இருந்தனர்.நிறைவாக ஆசிரியை முத்து லெட்சுமி நன்றி கூறினார்.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்
தேசிய அறிவியல் தினத்தினை முன்னிட்டு மாணவர்களே அறிவியல் சோதனைகளை செய்து
காண்பித்து அசத்தினார்கள்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.முருகப்பா அறக்கட்டளை பயிற்சியாளர்கள் அரங்குவளன் மற்றும் ஜெய்கணேஷ்
ஆகியோர் மாணவர்களுக்கு சோதனைகளை செய்து காண்பித்து விளக்கினார்கள்.
வீடியோ :
https://www.youtube.com/watch?v=kSTp2R4uqF8
No comments:
Post a Comment