ஆக்டிலேன் ஜூனியர் புத்தகங்கள் வழங்குதல்
அடிப்படை கற்றல் பயிற்சிக்கான புத்தகங்களை வழங்குதல்
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் அகஸ்தியாவின் ஆக்டிவ் லேர்னிங் அடிப்படை கற்றல் பயிற்சிக்கான புத்தகங்கள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.
ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். அகஸ்தியா மற்றும் அ .மு.மு.அறக்கட்டளை பயிற்சியாளர் சேகர் ஆக்டிவ் லேர்னிங் புத்தகங்களை மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு உள்ள அனைத்து மாணவர்களுக்கும் வழங்கினார்.
மாணவர்களின் அடிப்படை கல்வியறிவு, எண்ணியல் மற்றும் மோட்டார் திறன்களை எளிதாக கற்பதற்காக கதைகளுடன் திறமையாக வடிவமைக்கப்பட்டுள்ள இப்புத்தகத்தில் நேரடி செய்து கற்றல் செயல்பாடுகளும் ல் செய்யப்பட்டுள்ளது.
எளிமையானது முதல் சவாலானது வரையிலான செயல்பாடுகள் நமது குழந்தைகளின் பல்வேறு கற்றல் நிலைகளை இந்த புத்தகத்தின் மூலமாக பூர்த்தி செய்யப்படுகிறது. இது தொடர்பான சிறு தேர்வும் நடத்தப்பட்டது. 3,4,5 வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் இந்த புத்தகங்கள் வழங்கப்பட்டது.
இந்தப் புத்தகங்கள் பெற்ற மாணவர்கள் ஆர்வம் உள்ள எக்ஸ்பிளோரர் என்று அழைக்கப்படுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் ஸ்ரீதர் மற்றும் முத்துமீனாள் ஆகியோர் செய்திருந்தனர்.
மாணவர்களுடைய செயல்திறனை ஊக்குவிக்கும் வகையில் இப்புத்தகங்கள் அமைந்துள்ளன நிறைவாக அ .மு.மு.அறக்கட்டளை பயிற்சியாளர் பிரேமலதா நன்றி கூறினார்.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில அகஸ்தியாவின் அடிப்படை கற்றல் செயல்பாடுகளுக்கான புத்தகங்கள் 3,4,5 வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் அ .மு.மு.அறக்கட்டளை மற்றும் அகஸ்தியாவின் அறிவியல் பயிற்சியாளர்கள் சேகர் மற்றும் பிரேமலதா ஆகியோர் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கினார்கள்.
வீடியோ:
https://www.youtube.com/watch?v=bUvFboOdWRc
No comments:
Post a Comment