Monday, 19 February 2024

 இஸ்ரோவின்

ஜி.எஸ்.எல்.வி.,எப் 14 ராக்கெட்

வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு



 

 

தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ஏவியுள்ள ஜி.எஸ்.எல்.வி., எப்14 ராக்கெட்   வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள்  பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

                                                 இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நிலவின் தென் துருவத்திற்கு சந்திரயான் - 3 அனுப்பி சாதனை படைத்தது.அதனை தொடர்ந்து
‘இஸ்ரோ’ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், வானிலை நிலவரம், இயற்கை பேரிடரை முன்கூட்டியே கண்டறிவது உள்ளிட்ட ஆய்வுகளுக்கு பயன்படக்கூடிய, ‘இன்சாட் – 3டிஎஸ்’ செயற்கை கோளை வடிவமைத்துள்ளது. இதன் எடை, 2,274 கிலோ.  . இது, ஜி.எஸ்.எல்.வி., வகையில், 16வது ராக்கெட் புயல், மழை, வெள்ளம்; துல்லியமாக ‘இன்சாட் – 3டிஎஸ்’ செயற்கை கோள் கணிக்கும் என்கிற தகவலை  பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மாணவர்களுக்கு  எடுத்து கூறினார்.இந்த சாதனையை செய்த இஸ்ரோவின் அனைத்து விஞ்ஞானிகள்,பொறியாளர்கள்,தொழில்நுட்ப ஊழியர்கள் அனைவருக்கும் பள்ளி மாணவர்களால் வண்ண பலூன் பறக்கவிடப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் ஸ்ரீதர் செய்து இருந்தார் .


பட விளக்கம்: 
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ஜி.எஸ்.எல்.வி., எப்14 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள்  பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.


வீடியோ : 

https://www.youtube.com/watch?v=jE3n-huaoI4

No comments:

Post a Comment