Wednesday, 14 February 2024

 புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் 

மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தால் குணப்படுத்துவது எளிது

அரசு மருத்துவர் அறிவுரை 








 

தேவகோட்டை -  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

                                    ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். திருவேகம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மீரா கணேஷ்  மாணவ-மாணவிகளிடம் புற்றுநோய் பற்றி விரிவாக விளக்கி பேசுகையில் ,உடலில் எங்கேனும் கட்டியிருந்தால் அதனை தவிர்த்து விடக்கூடாது. குறிப்பாக கட்டி வலி  இல்லாமல் இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். 

                                        30 வயதிற்கு மேலாக பெண்கள் அவசியம் வருடம் ஒருமுறை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக வழங்கப்படும் பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும். 

                                     புற்று நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்துவிட்டால் மிக எளிதாக குணப்படுத்திவிடலாம். மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் ஆகியவை பெண்களுக்கு முக்கியமான புற்றுநோயாக இருக்கிறது.

                                  புகைப்பிடிப்பதால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுகிறது. புகை பிடிப்பவர் மட்டுமல்லாமல் அருகே இருப்பவருக்கும் புற்று  நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது .

                                    மாணவர்கள் இளம் வயதிலேயே நல்ல ஆரோக்கிய பழக்கவழக்கங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் பல்வேறு வியாதிகளில் இருந்து தங்களை காத்துக் கொள்ள முடியும் .

                                 காலையில் விரைவாக எழுந்து நல்ல முறையில் உடற்பயிற்சிகள் செய்து நம் உடலை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும். 

                          மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அனைத்து விதமான உடல் பரிசோதனை களையும் நல்ல முறையில் செய்து கொள்ள வேண்டும்.

                         புற்றுநோய் சிலருக்கு பரம்பரையாக வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. வாழ்க்கை முறையில் உணவு முறைகளை மாற்றுவதும் புற்றுநோய் வருவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றது.

                                நம் உடலின் நகம் மற்றும் முடி தவிர மற்ற அனைத்து இடங்களிலும்  புற்றுநோய் பாதிப்பு வர வாய்ப்பு உள்ளது..திருவேகம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் சௌந்தர வள்ளி மற்றும் பாரதி கனி  ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

                                   மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் மருத்துவர் பதில் அளித்தார் நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியை முத்துமீனாள் செய்திருந்தார்.

 படவிளக்கம் :  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. திருவேகம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மீரா கணேஷ் மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார். தலைமையாசிரியர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

 

வீடியோ : 

 https://www.youtube.com/watch?v=rcmCnpDRDRI

No comments:

Post a Comment