தி இந்து தமிழ் திசை நாளிதழின் விருதுக்கு தேர்வான மாணவிகளுக்கும், பள்ளிக்கும் வாழ்த்துகள்
இந்து தமிழ் திசை நாளிதழ் நடத்திய பள்ளி மாணவர்கள் இடையிலான நற்சிந்தனைகளை உண்டாக்கும் நோக்கில் நற்சிந்தனை நன்னடை என்னும் சிறப்புமிக்க நிகழ்வில் மாணவப் பருவத்திலேயே சமூக அக்கறையுடன் சிறப்பான செயல்களை செய்து வரும் மாணவ மாணவிகளை பாராட்டி கவுரவிக்க உள்ளனர்.
இதனில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவிகள்
ச.நந்தனா, - 5ம் வகுப்பு
மா.ரித்திகா - 5ம் வகுப்பு
ஆகிய இருவரும் தேர்வாகி உள்ளார்கள் .
இப்போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து பல நூறு மாணவர்கள் பங்கேற்றனர்.
அவர்களில் பாராட்டுக்காக தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு சில மாணவர்களுள் இப்பள்ளி மாணவர்களும் தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
பள்ளிக்கும் விருது :
மேலும் மாணவர்களின் நற்செயல்கள் செய்வதை ஊக்கப்படுத்தி வரும் பள்ளிக்கும் "நற்சிந்தனை நன்னடை விருதினை" இந்து தமிழ் திசை நாளிதழ் குழுமம் வழங்க உள்ளது.
வாருங்கள்! வாழ்த்துங்கள்! நண்பர்களே! நன்றி.
அன்புடன்
லெ . சொக்கலிங்கம்,
தலைமையாசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.
No comments:
Post a Comment