Thursday, 4 January 2024

படிக்கப் புத்தகம்  கொடுத்து பரிசும் வழங்கிய பள்ளி 

 படிக்கும் வயதில் சிரமங்களை கருதாமல் தொடர்ந்து படியுங்கள் 

வங்கி  மேலாளர் அறிவுரை 





 

  தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் புத்தகம் வாசித்து சிறப்பாக பின்னூட்டம் அளித்த மாணவர்களுக்கு பரிசுகளை கனரா வங்கி முதன்மை மேலாளர்  வழங்கினார்.

                                  பள்ளி ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.  பள்ளி நூலகத்தில் இருந்து புத்தகம் படித்து சிறப்பாக பின்னூட்டம் வழங்கிய மாணவர்களுக்கு தேவகோட்டை கனரா வங்கி முதன்மை மேலாளர் அபிஷேக் குமார் குப்தா   புத்தகங்களை  பரிசாக வழங்கி பேசுகையில், வாழ்க்கையில் நல்ல புத்தகங்களை தேர்ந்தெடுத்து படித்து நல்ல குடிமக்களாக உருவாக  உங்களை உயர்த்திக் கொள்ளவேண்டும். அப்போதுதான்  வாழ்க்கை நல்ல முறையில் அமையும். 

                                             நான் நல்ல முறையில் படித்ததால்தான் வட மாநிலமான காசியில் இருந்து தேவகோட்டை  வந்து பணிபுரிகிறேன்.படிக்கும் வயதில் எவ்வளவு சிரமங்கள் வந்தாலும்  முயற்சி எடுத்து விடாமல்  படியுங்கள். 

                                    உங்களுக்கு நல்ல ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் கிடைத்துள்ளார்கள். பள்ளியும் நல்ல முறையில் அமைந்துள்ளது.படிக்கும் வாய்ப்பை தொடர்ந்து பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள் .என்று கூறினார். மாணவர்கள் விஜய்கண்ணன்,சபரிவர்ஷன், ஏஞ்சல் ஜாய் , நந்தனா,ரித்திகா,சுபிக்ஷன்,கனிஷ்கா,தனலெட்சுமி ஆகியோர் புத்தகங்களை பரிசாக பெற்றனர்.   நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்..கனரா வங்கி உதவியாளர் பாலா உட்பட பலர் பங்கேற்றனர்

 படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் நூலக புத்தகங்களை படித்து சிறப்பாக பின்னூட்டம் வழங்கிய மாணவர்களுக்கு தேவகோட்டை கனரா வங்கி முதன்மை மேலாளர் அபிஷேக் குமார் குப்தா  புத்தகங்களை பரிசாக வழங்கினார். பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்..கனரா வங்கி உதவியாளர் பாலா உட்பட பலர் பங்கேற்றனர்

 

வீடியோ : 

https://www.youtube.com/watch?v=mUtAUfwtWX0

https://www.youtube.com/watch?v=8BPNh7zkB_o

No comments:

Post a Comment