தேசிய இளைஞர் தினம்
விவேகானந்தரின் பொன் மொழிகளை பின்பற்றுங்கள்
தேவகோட்டை தாசில்தார் பேச்சு
விவேகானந்தரின் பொன்மொழிகள் ஒப்புவித்தல் , ஓவிய போட்டிகள்
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய இளைஞர் தின விழா நடைபெற்றது.
ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை வட்டாட்சியர் அசோக்குமார் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசுகையில், மாணர்கள் விவேகானந்தர் கூறியவற்றை பின்பற்ற வேண்டும்.அப்போதுதான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.நல்ல விசயங்களை இளம் வயது முதலே வாழ்க்கையில் கற்று கொண்டு அதனை பின்பற்ற பழகி கொள்ள வேண்டும். என்றார்.விழாவில் விவேகானந்தர் தொடர்பான ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற அஜிதா, ஜெயஸ்ரீ, அஜய் ஆகியோர்க்கும், விவேகானந்தரின் பொன்மொழிகள் சொல்லுதல் போட்டியில் வெற்றி பெற்ற ஜெபிகா, நவீன் , ஏஞ்சல் ஜாய் , கவிஷா, தாவதுர்கா, பிரியங்கா, யோகேஸ்வரன் ஆகியோர்க்கும் புத்தகங்கள் பரிசுகள் வழங்கப்பட்டன.மாணவ,மாணவியர் ஆர்வமுடன் விவேகானந்தர் பொன்மொழிகளை எடுத்துக்கூறினார்கள். மழலை மொழியில் மாணவர்கள் பேசியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.நிறைவாக ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய இளைஞர் தின விழாவினையொட்டி நடைபெற்ற ஓவியம் வரைதல் மற்றும் விவேகானந்தரின் பொன்மொழிகள் சொல்லுதல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தேவகோட்டை வட்டாட்சியர் அசோக்குமார் பரிசுகளை வழங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
வீடியோ :
https://www.youtube.com/watch?v=saD5znjjNik
https://www.youtube.com/watch?v=0TTkkn7ksCU
No comments:
Post a Comment