Thursday 28 January 2021

  கொரோனா காலத்தில் வறுமையான சூழ்நிலையிலும் அதிகம் ஆசை படமால்  நியாயமான தொகை பெற்ற  பஞ்சர் பார்ப்பவர் 

ஆச்சிர்யத்தில் அசத்திய பஞ்சர் பார்ப்பவர்

 



              நண்பர்களே  கடந்த 2020 ஜூலை  மாதம் ஒரு நாள் எனது டூ வீலர் பஞ்சர் ஆகிவிட்டது. காரைக்குடியில் நான் குடியிருக்கும் இடத்திலிருந்து டூவீலரை தள்ளி சென்று பஞ்சர் பார்ப்பதற்கு   நீண்ட தூரம் செல்ல வேண்டும். எனக்கு தொடர்ச்சியாக வண்டி வேலை பார்த்து கொடுக்கும் தோழர் ஒருவரை தொடர்பு கொண்டபோது, காரைக்குடியில் மொபைல் மூலமாக சொல்லி   வண்டி மூலமாக மொபைல் பஞ்சர் பார்ப்பவரான செல்வம் என்பவர் எண்  கொடுத்தார். நானும் தொடர்பு கொண்டேன். முதல் நாள் வருவதாக கூறியிருந்தார் . அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்தில் என்னை சந்திப்பதாக கூறி இருந்தார். ஆனால் அன்று முழுவதும் வரவில்லை. மறுநாள் நான் போன் செய்தேன். சார் என்னுடைய மனைவிக்கு உடல்நிலை சரியில்லை. புதுக்கோட்டை வரை சென்று உள்ளேன். நாளை கட்டாயம் வந்து விடுகிறேன். வேறு யாரும் இதுவரை வரவில்லையா ? என்று கேட்டார். நானும் சில ரிப்பேர் பார்ப்பவர்களை தொடர்பு கொண்டேன். அவர்களும் வரவில்லை என்று கூறினேன். நிச்சயமாக எனது மனைவியை இன்று மாலை ஆஸ்பத்திரியில் இருந்து அழைத்து வந்து வீட்டில் விட்டுவிட்டு நாளை காலை வருகின்றேன் என்று உறுதியாகக் கூறினார். மறுநாள் சொன்னபடி எனது எண்ணுக்கு தொடர்புகொண்டு காலையிலேயே வந்து எனது வாகனத்தை ரிப்பேர் செய்து கொடுத்தார். நானும் எவ்வளவு ரூபாய் என்று முன்பே கேட்டிருந்தேன். பஞ்சர்  அளவைப் பொருத்து பணம் பெற்றுக் கொள்வேன் என்று என்னிடம் தெரிவித்திருந்தார் .எனது வண்டி ரிப்பேர் பார்த்துவிட்டு 100 ரூபாய் மட்டும் பெற்றுக் கொண்டார் . எனக்கு ஆச்சரியம் ஏன் என்றால் நான் நகரத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில்தள்ளி  தற்போது குடியிருந்து வருகிறேன். இந்த இடத்திற்கு வருவதற்கு ஐம்பதிலிருந்து நூறு ரூபாய் பெற வேண்டும்.  ஆனால் அவரும் பஞ்சர்  பார்த்துவிட்டு 100 ரூபாய் மட்டும் கொடுங்கள் என்று கூறினார் .முதலில் நீங்கள் கொடுங்கள் என்று கூறினார். நான் எனக்கு உங்களுடைய வேலையை பற்றி தெரியாது. எனவே நீங்கள் கூறுங்கள் என்று பலமுறை கூறிய பிறகே 100 ரூபாய் என்று கூறினார். நானும் தூரத்தை கணக்கு செய்து 150 ரூபாய் கொடுத்தேன். வேண்டாம் எனக்கு 100 ரூபாய் மட்டுமே போதும். அதற்கு உரிய வேலையை தான் நான் பார்த்துள்ளேன் என்று தெரிவித்தார். ஆச்சரியம் என்னவென்றால் கொரோனா  நேரத்தில் அவருக்கு வேலையும் குறைவு என்று என்னிடம் தெரிவித்தார். இதுபோன்ற சூழ்நிலையில் அவரது நேர்மை,  சரியான தொகை பெறுதல் என்பவை எனக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தையும், அவர் மீதான மதிப்பையும் அதிகப்படுத்தியது. வறுமையான சூழ்நிலையில் இருந்தாலும் தனது தொழிலுக்கு உண்டான பணத்தை மட்டுமே பெற்றுக் கொண்ட அவர் எனக்கு வறுமையிலும் நேர்மையானவராக தெரிந்தார். இப்படியும் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்று எண்ணும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.  மீண்டும் நேற்று எனது வண்டி பஞ்சரானபோது  அழைத்திருந்தேன். அதேபோன்றே வருகை தந்து 100 ரூபாய் மட்டுமே பெற்று சென்றார். எனக்கு இது மிகப்பெரிய ஆச்சிர்யத்தை அவரது செயல் கொடுத்தது.கொரோனா காலத்தில் வறுமையான சூழ்நிலையிலும் அதிகம் ஆசை படமால் அன்னார் அவர்கள் சரியான தொகை பெற்று சென்றது எனக்கு அதிசயமாக இருந்தது.செல்வம் அவர்களை வாழ்த்துவதற்கு  அவரது மொபைல் எண் : 8940457316.  

தகவல் அளித்தவர் 

லெ .சொக்கலிங்கம்,

காரைக்குடி.

8056240653 

No comments:

Post a Comment