Sunday 3 January 2021

 

பாவை விழா போட்டிகள்

அழகாக மழலை மொழியில் திருப்பாவை ,திருவெம்பாவை பாடி பாராட்டு பெற்ற மாணவர்கள் 

 

















தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு இணையம் வழியாக பாவை விழா போட்டிகள்  நடைபெற்றது. போட்டியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றார்கள் 

                                  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில்  ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் பாவை விழா போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கி வருவது  வழக்கம். தற்போது கொரோனாவால் பள்ளி  மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடப்பதை கருத்தில் கொண்டு  மாணவர்கள் வீட்டிலேயே திருப்பாவை,திருவெம்பாவை சொல்லும்  போட்டிகளில் பங்கேற்க செய்து   மாணவர்களை ஆன்லைன் வழியாக வீடியோவாக அனுப்ப சொல்லி பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துமீனாள் ,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி ஆகியோர் அலைபேசி மூலம் மாணவர்களை தொடர்பு கொண்டு   ஊக்குவித்தனர் . மாணவர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்தபடியே இது போன்ற போட்டிகளில் பங்கேற்க செய்வது அவர்களது உடல்நலம் மற்றும் மனநலத்துக்கு  உதவுவது ஆகும் . இணையம் வழியாக  1 முதல் 8ம்  வகுப்பு வரை திருப்பாவை ,திருவெம்பாவை போட்டிகள் தனித்தனியாக மாணவர்களுக்கு நடைபெற்றது.போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் திவ்யஸ்ரீ,தேவதர்ஷினி,மெர்சி,சொர்ணமேகா,ஹரிப்ரியா,

யோகேஸ்வரன்.அட்சயா,ஈஸ்வரன்,கனிஷ்கா,முத்தய்யன்,

சபரி , வள்ளியம்மை, லெட்சுமி,ரதிபிரதா , கீர்த்தியா,கன்னிகா ஆகியோர்  அழகாக பாடல்கள் பாடியதற்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.விரைவில்  போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களில் சிறந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.இப்பள்ளி மாணவர்களுக்கு  ஆன்லைன் வழியாக  பாட  வகுப்புகளும், பல்வேறு மத்திய,மாநில அரசுகள் நடத்தும் ஆன்லைன் போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க வைப்பதும்  , சதுரங்க பயிற்சிகள்  நடைபெற்று வருவதும் , இணையம் வழியாக நடைபெற்ற சட்டமன்ற பணிகள் குழுவின் பட்டிமன்றத்தில் பங்கேற்று பரிசுகள் பெற்றதும் , ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று சான்றிதழ் பெற்றது என நடைபெறும் நிகழ்வுகள் ஊரடங்கு காலத்தில் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்று பெற்றோர்கள்  தெரிவித்தனர்.


பட விளக்கம் :சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்  இணையம் வழியாக குழந்தைகளுக்கான பாவை விழா போட்டிகளில் பங்கு கொண்டு திருப்பாவை,திருவெம்பாவை பாடல்களை அழகாக மழலை மொழியில் பாடி ஆன்லைன் மூலம் வீடியோக்களை அனுப்பினார்கள்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்தமீனாள் ,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி ஆகியோர் மாணவர்களை போட்டிகளில் பங்கேற்க ஊக்குவித்தனர். 

 வீடியோக்கள் 

 https://www.youtube.com/watch?v=WHIEuWpLBdI

 https://www.youtube.com/watch?v=qEPmL2Kmqn0

 https://www.youtube.com/watch?v=mVkzmFx5Pk0

 https://www.youtube.com/watch?v=otCCkWD7UeE

 

 

 

No comments:

Post a Comment