Thursday 23 January 2020

சாலை பாதுகாப்பு வார விழா

தலைக்கவசம் உயிர்கவசம் 
விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம்

போக்குவரத்து காவல் ஆய்வாளர் பேச்சு 






தேவகோட்டை  - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.

                                       ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். தேவகோட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஞானதிரவியம் தலைமை தாங்கி பேசுகையில், கை கால்களில் அடிபட்டால் மீண்டும் சரியாகிவிடும் .தலையில் அடிபட்டால் உயிர் இழக்க நேரிடும். எனவே அனைவரும் உங்கள் பெற்றோர்களிடம்  தலை கவசம் உயிர் கவசம் என சொல்லி தலைக்கவசம் அணிய சொல்லுங்கள். சந்தோசமாக உங்களது வாழ்க்கையை நகர்த்துங்கள் .போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடியுங்கள் .முன்பெல்லாம் ஒரு வீட்டில் ஒரு சைக்கிள் மட்டும்தான் இருந்தது .ஆனால் இப்பொழுது ஒவ்வொருவர் வீட்டிலும் மூன்று இருசக்கர வாகனங்கள்,  ஒரு கார் உள்ளது .எனவே தலைக்கவசம் அணிந்து உங்கள் குடும்பத்தையும் உங்களையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள். போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடியுங்கள் .வலதுபுறம், இடதுபுறம், குறுக்கு சந்துகளில் பார்த்து திரும்புங்கள் என்று கூறினார். தேவகோட்டை நகர் காவல் சார்பு ஆய்வாளர்கள் மருது, திருமுருகன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள் . போக்குவரத்து காவலர்கள் செந்தாமரை கண்ணன், சுப்பிரமணியன் ஆகியோர் சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு படங்களை காண்பித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தார்கள். சாலை பாதுகாப்பு தொடர்பாக மாணவி கீர்த்திகா, தேவதர்ஷினி ஆகியோர் பேசினார்கள் .ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.



 படவிளக்கம்:  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழாவில் தேவகோட்டை போக்குவரத்து நகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜஸ்டின் திரவியம் மாணவர்களிடம் பாதுகாப்பான பயணம் தொடர்பாக விளக்கினார். தேவகோட்டை நகர் காவல் சார்பு ஆய்வாளர்கள் மருது, திருமுருகன் போக்குவரத்து காவலர்கள் செந்தாமரைக்கண்ணன் , சுப்பிரமணியன் ஆகியோர் மாணவர்களுக்கு போக்குவரத்து தொடர்பான விதிமுறைகளை  செய்து காண்பித்தனர் .பள்ளி தலைமையாசிரியர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.

No comments:

Post a Comment