Saturday 25 January 2020

குடியரசு தின விழா
குடியரசு தின விழாவில் அனைவருக்கும் சாக்லேட் தவிர்த்து   
கடலை மிட்டாய் இனிப்பு  வழங்கி கொண்டாடுதல் 










தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா நடைபெற்றது.


                  ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை தீயணைப்பு துறையின் மேனாள் நிலைய அலுவலர் நாகராஜ் கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார்.புகழேந்தி,கீர்த்தியா,மகாலெட்சுமி,அட்சயா, ஆகியோர் குடியரசு தின கவிதையும், திவ்யஸ்ரீ,ஜெயஸ்ரீ ஆகியோர் குடியரசு தின பாடலையும்,குடி  உரிமை என்ற தலைப்பில் ஜோயல் ரொனால்டும், குடியரசு தினம் தொடர்பாக சபரீஸ்வரன்,முத்தய்யன் ,வள்ளியம்மை ஆகியோரும் பேசினார்கள்.  மாணவர்களுக்கும் ,ஆசிரியர்களுக்கும்  அனைவருக்கும் சாக்லேட் தவிர்த்து  கடலை மிட்டாய் இனிப்பு வழங்கப்பட்டது.இப்பள்ளியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மாணவர்களின் பிறந்த நாள்களுக்கு அவர்களே சாக்லேட் தவிர்த்து கடலை அச்சு மிட்டாய் இனிப்பாக வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.குடியரசு தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  பரிசுகள் வழங்கப்பட்டன.

பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேவகோட்டை தீயணைப்பு துறையின் மேனாள் நிலைய அலுவலர் நாகராஜ்  கொடி ஏற்றி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.


No comments:

Post a Comment