Thursday 2 January 2020

பறவைகள் வளர்த்து செடிகளை அன்பாக பராமரிக்கும் இளம் தம்பதிகள்



                 தினமலர் பட்டம் இதழில் பணியாற்றும் நண்பர் மனோ அவர்கள் திருமண பத்திரிக்கையை அனுப்பியிருந்தார். விளாத்திகுளத்தில் அன்றைய சூழ்நிலையில் என்னால் செல்ல இயலாமல் போய்விட்டது. காரணம் கந்தசஷ்டி விழா முதல் நாள் இரவு 11 மணி வரை நடைபெற்று வீட்டிற்கு வந்து அடுத்த நாள் செல்ல இயலாமல் சென்று விட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்று நாங்கள் மனோ அவர்களை வீட்டில் சந்தித்தோம் .சென்னை சென்று வீட்டில் சந்தித்தோம் .மனோ அவர்கள் எங்களுடன் இயல்பாக பேசினார்கள் அவர்களுடைய மனைவி அவர்களும் எங்கள் குடும்பத்தினருடன் நன்றாக பழகிய நன்றாகப் பேசினார்கள். அவர்கள் வீட்டில் ஒரு இரண்டு பறவைகள் வளர்க்கிறார்கள்.  கிளி இரண்டும் அருமையாக பேசியிருக்கிறது. சோகமாக இருக்கும்போது சோகமாக பேசுவதாகவும், மகிழ்ச்சியாய் இருக்கும் போது அவையும் மகிழ்ச்சியாக பேசும் என்றும் மனோ அவர்களின் துணைவியார் கூறினார்கள். வீட்டில் தனியாக இருக்கும் பொழுது அந்த தருணத்தை போக்குவதற்காகவே  அவர்கள் கிளி வளர்ப்பதாகவும், அவை இருக்கும் பொழுது ஒரு உயிர் நம்முடன் இருப்பது போன்று எண்ணம் ஏற்படுவதாகவும் கூறினார்கள், உண்மைதான் வாழ்த்துக்கள், இருவருக்கும். மேலும் வீட்டின் பின்பக்கமாக செடிகளும் கீரைகளும் வைத்து அவர்கள் வளர்ப்பது பாராட்டுதற்குரியது. இளம் வயதில் திருமணம் ஆனவுடன் இதுபோன்ற செயல்பாடுகள் செய்வது மிகுந்த சிரமமான வேலை .ஆனால் அவற்றின் நடுவே அவர்கள் சிறப்பாக இதனை செய்து வருகிறார்கள் .அவர்களுடன் சந்தித்தபொழுது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது .அவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி கலந்த அன்புடன் 
லெ . சொக்கலிங்கம் ,தலைமையாசிரியர் ,சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி , தேவகோட்டை .சிவகங்கை மாவட்டம்.

No comments:

Post a Comment