Saturday 26 October 2019

தி இந்து தமிழ் திசையின் ஓவியப் போட்டி 

ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை படைப்போம் 

கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் - 2019




தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தி இந்து தமிழ் திசையின் ஓவிய போட்டி நடைபெற்றது.
                                                               என்.எல்.சி . இந்தியா லிமிடெட் நிறுவனம் மற்றும் இந்து தமிழ் திசை இணைந்து கண்காணிப்பு வாரம் 2019யை முன்னிட்டு ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை படைப்போம் என்ற தலைப்பில் நடத்திய ஓவிய போட்டியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.பள்ளி அளவில் நடைபெற்ற இப்போட்டிகள்  தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்றது.மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஊழலை தடுப்போம், ஊழலின் பாதைகள் என்ற தலைப்பிலும்,7 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு தினசரி வாழ்க்கையில் ஊழலின் சங்கிலி மற்றும் ஊழலற்ற எனது நாடு எனது பொறுப்பு என்கிற தலைப்பிலும் போட்டிகள் நடைபெற்றது.அதிகமான மாணவர்கள் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.ஆசிரியர் ஸ்ரீதர் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் தபால் மூலம் இந்து தமிழ் திசை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது.புதிய விதமான தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றதற்கு மாணவர்கள் தி இந்து தமிழ் திசை நாளிதழுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


பட விளக்கம் :தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தி இந்து தமிழ் திசையின் ஓவிய போட்டியில் மாணவர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment