Saturday 22 December 2018


"கணக்குப் பாடத்தை விருப்பமுடன் கற்போம்" தேசிய கணித தினத்தில் மாணவர்கள் உறுதிமொழி








 



தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய கணித தின விழா கொண்டாடப்பட்டது. இதில், 'கணக்குப் பாடத்தை ஒதுக்க மாட்டேன், பயத்துடன் கற்காமல் விருப்பத்துடன் கற்பேன்' என மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 

   விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கி பேசினார்.ஆசிரியைகள் செல்வமீனாள் ,முத்து மீனாள் ஆகியோர் கணிதம் தொடர்பாக செயல் முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.முன்னதாக மாணவர் கார்த்திகேயன் வரவேற்றார்.மாணவி அபிநயா நன்றி கூறினார்.மாணவர்கள் கணிதமேதை ராமானுஜத்தின் திருவுருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தனர். "கணித பாடத்தை ஒதுக்க மாட்டேன். பயத்துடன் கணக்கு பாடத்தைப் படிக்க மாட்டேன். விருப்பத்துடன் கற்பேன். கணித சூத்திரங்களைப் புரிந்து எளிமையாகக் கணக்குகளைச் செய்வேன். கணக்கு எளிது. கணக்கு பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறுவேன். கணக்கு பாடத்தைப் பாரமாக நினைக்கும் மாணவர்களுக்கு என்னால் முடிந்தவரை புரிய வைப்பேன்" என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஷார்ட் கட் மெத்தட் முறையில் கணக்குகளைச் செய்து காண்பித்தனர்.
 ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கணித புதிர்ப்போட்டி நடத்தினர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்  வழங்கப்பட்டது.

பட விளக்கம் :  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில்தேசிய கணித தின விழா கொண்டாடப்பட்டது. இதில், 'கணக்குப் பாடத்தை ஒதுக்க மாட்டேன், பயத்துடன் கற்காமல் விருப்பத்துடன் கற்பேன்' என மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.







                                   

No comments:

Post a Comment