Monday, 11 May 2020

ஆளுமைகளுடனான அனுபவங்கள் 

பல்கலைக்கழக துணைவேந்தர் திரு. ராஜேந்திரன் அவர்களுடன் பழகிய அனுபவங்கள்  

20/02/2019

 Chairman Manikca vasagam middle school. A great school with humble atmosphere.Brilliant students , sharp, observent.With a mind to enquire into the unknown with humble family background.Dedicated teachers, a H.M. with vision and dediction an out of ordinary person.Great exprience in my life.
                                                   I wish the students and the school a brilliant future.Let god and noble men be with this school.

N.Rajendiran,
Vice Chancellor,
Alagappa University,
Karaikudi.
                                                17/06/2019


                       சிறந்த பள்ளி,சிறப்பான ஆசிரியர்கள்,நல்ல எண்ணம்,சிறந்த முயற்சி இவை அனைத்தும் இப்பள்ளி மாணவர்களை  உலகம் வியக்கும் சாதனையாளர்களாக பார்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.


N.Rajendiran,
Vice Chancellor,
Alagappa University,
Karaikudi.






Sunday, 10 May 2020

 ஆளுமைகளுடனான அனுபவங்கள்

தேவகோட்டை போலீஸ் ASP திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்களுடனான பள்ளி பகிர்வுகள்

Krishnaraj R IPS
ASP,Devakottai.

                   Had a good interaction with the school students, teachers and Principal of the school on the ocaasion of Bhartiar's day.The studnets are very good and disciplined.The School is doing good under the principal & teachers. I am happy to have come here.
         
                                     All the best!                                Thank you
Devakottai.                                                                        11/12/2019                                                                         Krishnaraj R IPS
                                                                                           ASP,Devakottai.

Saturday, 9 May 2020

 ஆளுமைகளுடனான அனுபவம்

ஹாங்காங் நாட்டின் தமிழ்ச் சமூகப் பிரமுகரும், பொறியாளருமான  ராமநாதன் அவர்களுடன் பழகிய அனுபவம்


                                தாய்வழிக்  கல்வியின் சிறப்பைப் பற்றியும் அரசு கல்லூரிகளின்  மேன்மை பற்றியும் ஹாங்காங் வாழ்க்கை பற்றியும் எனது கருத்துக்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். உரையைத் தொடர்ந்து மாணவர்கள் கேட்ட கேள்விகளும், நிகழ்ச்சியின் நிறைவாக உரையைப் பற்றிய மாணவர்களின் கருத்துரைகளும் என்னை வியப்பில் ஆழ்த்தின. மாணவர்கள் கலந்துரையாடலில் முழுமையாய் பங்கேற்ற விதம் சிறப்பானது, இவர்களுக்கு மிகச் சிறப்பான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது.
                             இதைச்  சாதித்து வரும் ஆசிரியர்களுக்கும் குறிப்பாக தலைமையாசிரியர் எல். சொக்கலிங்கம் அவர்களுக்கும் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

 மு. ராமநாதன்
பொறியாளர்
ஹாங்காங்.


Thursday, 7 May 2020

ஆளுமைகளுடனான அனுபவங்கள் 

 ஐஐடி மெட்ராஸ் மேலாண்மை துறை தலைவர் பேராசிரியை மு. தேன்மொழி அவர்களுடனான பள்ளி பகிர்வுகள் 

ஐஐடி மெட்ராஸ் மேலாண்மை துறை தலைவர் பேராசிரியை தேன்மொழி  அவர்கள் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு எழுதிய பள்ளி பற்றி எழுதிய வரிகள்:

                        இன்று இந்தப் பள்ளி மாணவர்களின் திறமையைக்  கண்டு மிக மகிழ்ச்சி அடைந்தேன். பேச்சு, நடனம், பாட்டு என்று எல்லாவற்றிலும் மிகத் திறமையாக இருக்கிறார்கள். பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் சிறந்த மாணவர்களை உருவாக்கி வருகிறார்கள். மேலும் இப்பள்ளி ஒரு முன்மாதிரி (மாடல்) பள்ளியாக உருவாகியுள்ளது.  பல பரிசுகள் பெற பல துறையில் திறமையானவர்களாக உருவாக,  வாழ்க்கையில் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

 மு. தேன்மொழி,
 பேராசிரியர்
 ஐஐடி மெட்ராஸ்,
 சென்னை.






Tuesday, 5 May 2020

ஆளுமைகளுடனான அனுபவம் 

தமிழகத்தின் முதல் பெண் விமானி காவியா அவர்களுடனான பள்ளி பகிர்வுகள்

தமிழகத்தின் முதல் பெண் விமானி அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்து பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு பின்வருமாறு பள்ளியை பற்றி பாராட்டி எழுதிய வரிகள் :

     Today 06/11/2019, I would like to thank  Mr. Chokkalingam for this golden opportunity. I was so overwhelmed to see each and every student so talented and disciplined. In fact, I have learned a lot of things from the students today. I was too happy to be part of this school far today. I really admire the way students treated the teachers and other fellow beings. Especially I enjoyed the தமிழ் தாய் வாழ்த்து sung by one of the students Nandana. I wish all the happiness prosperity and good well for the Chairman Manikca Vasagam  School students and teachers. Thank you somuch for the golden opportunity. 
                                                With the love,
                                                   Regards,
                                                   Kavya R


Sunday, 3 May 2020

வாட்ஸ்அப் வழியாக பள்ளி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும்  ஆசிரியர்கள்




ஆளுமைகளுடனான அனுபவம் 

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் சொ . சுப்பையா அவர்களுடன் பழகிய அனுபவம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுப்பையா அவர்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு பள்ளி குறித்து பாராட்டி எழுதிய வரிகள்: 

சொ . சுப்பையா 
முன்னாள் துணைவேந்தர் 
அழகப்பா பல்கலைக்கழகம் 
காரைக்குடி 
05/07/2018

                           இன்று இந்தப் பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததை பெருமையாகக்  கருதுகிறேன். ஏனெனில் கிராமத்து மாணவர்களிடம் என்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை இப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு . L . சொக்கலிங்கம் ஏற்படுத்தித் தந்தார். இப்பள்ளியின் செயல்பாடுகள் ,மாணவர்களை வழி நடத்தும் விதம், வாழ்க்கையில் சாதித்தவர்களையும், உயரிய பதவியில் உள்ளவர்களையும்  அழைத்து மாணவர்களிடம் கலந்துரையாட வைப்பது மிகச்சிறந்த நடைமுறையாகும். மாணவர்களிடம் புதைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு போட்டிகளை இப்பள்ளியில் நடத்துவதோடு மட்டுமின்றி, பிற நிறுவனங்களில் நடைபெறுகிற நிகழ்ச்சிகளுக்கும், போட்டிகளுக்கும் அழைத்துச் சென்று பங்கேற்க வைப்பது மிகவும் சிறப்பான அம்சம் ஆகும். ஒரு அரசு உதவி பெறும் பள்ளியை தனியார் பள்ளியை விட சிறப்பாக தலைமையேற்று நடத்துகிறார் தலைமையாசிரியர் அவர்களையும் துணையாக அவருக்கு துணையாக செயல்படுகிற ஆசிரியர் பெருமக்களையும் வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். இப்பள்ளி, இன்னும் பல சிறப்புகளையும், பெருமைகளையும் இத் தலைமை ஆசிரியரின்  தலைமையில் அடையும் என்பதில் எனக்கு ஐயமில்லை.
                                                                                        வாழ்த்துக்களுடன் 
                                                                                       சொ .சுப்பையா