Tuesday, 9 December 2025

    காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி 

காசநோய் அறிகுறிகள் என்னென்ன? விரிவான தகவல்கள் 






தேவகோட்டை -  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் காசநோய் குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது. 

                            ஆசிரியை வள்ளிமயில் வரவேற்றா.ர் தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஆல் த சில்ட்ரன் தொண்டு நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் முன்னிலை வகித்தார்.

                                        ரீடா அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் தேவகோட்டை  கணேசன் மாணவர்களிடம் காச நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசுகையில் , காசநோய் என்பது காற்றில் பரவக்கூடிய வைரஸ் ஆகும். மற்ற வைரஸ்  எல்லாமே தரைக்கு வந்து விடும்.

                                காசநோய் வைரஸ் இருபத்தி நான்கு மணி நேரம் காற்றிலேயே இருக்கும். காசநோய் வைரஸ் பரவும் வேகம் மிக அதிகம். காச நோய் வருவது தெரியாது.

                                          ஆரம்ப நிலையில் இருக்கும்போது  தெரியாது. உள்ளுக்குள்ளேயே ஃபார்ம் ஆகிவிட்டால் நுரையீரலை பாதிக்கும். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.

                                           காசநோயின் அறிகுறிகள் 4 உள்ளன. தொடர்ந்து ஒரு வாரம் அல்லது இரண்டு வாரத்திற்கு இருமல், சளியுடன் இரத்தம் சேர்ந்து வருதல், மாலை நேரக் காய்ச்சல், உடனே எடை குறைவது போன்றவை ஆகும்.

                                    காச நோய் முழுமையாக குணப்படுத்தக் கூடிய ஒன்றாகும். வேறு நோய்களை முழுமையாக குணப்படுத்துவது சில நேரங்களில் சிரமமாக இருக்கும் .

                                    காலையில் வெறும் வயிற்றில் உமிழ்நீர் டெஸ்ட் எடுத்துப் பார்த்தால் மட்டுமே காச நோய் இருப்பதை கண்டுபிடிக்க முடியும். உலகத்தில் சுமார் 80 முதல் 90 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்படுகிறார்கள். 

                                      மூன்றில் ஒருவருக்கு காசநோய் உலகத்தில் இருக்கின்றது. இந்திய நடைமுறையில் மக்கள் தங்களுக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் தானாகவே மெடிக்கலில் மாத்திரை வாங்கி சாப்பிடுகிறார்கள். இது மிகவும் தவறான ஒன்றாகும்.

                                         நமக்கு உடல் நிலை சரியில்லை என்றால் நாம் மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகளை வாங்கி சாப்பிடவேண்டும். அரசு ஆஸ்பத்திரியில் காசநோயைக் என்று தனிப் பிரிவு உள்ளது.

                                      காசநோய் அறிகுறிகள் தென்பட்டால் நாம் உடனே மருத்துவமனையில்  காண்பிக்க வேண்டும். இல்லையென்றால் நுரையீரலை பாதிக்கும். நுரையீரல் பாதித்தால் சிறுநீரகம், மூளை மற்ற நரம்புகளை பாதிக்கும்.

                                     காசநோய்க்கு ஆறு மாதம், 9 மாதம், ஒரு வருடம் வரை சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும். முழுமையாக குணமடைந்த பிறகு வீட்டிற்கு வரலாம். மாத்திரையை ஒரு நாளும் விடக்கூடாது. காலை 9 மணிக்கு மாத்திரை  எடுத்துக்கொண்டால்  அடுத்த நாள் அதே மாதிரி 9 மணிக்கு மீண்டும் மாத்திரை எடுத்துக்கொள்ளவேண்டும்.

                                    ஒரு மாதத்திற்கு மாத்திரையை விடாமல் போடவேண்டும். மாத்திரையை விடாமல் போட்ட பிறகு மறுபடி டெஸ்ட் எடுத்துப் பார்க்க வேண்டும்.

                                       காசநோய் பற்றி பயப்பட வேண்டாம். காற்றில் வேகமாக பரவும். அதனால் பொது இடங்களில் போகும் போது மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும். 

                          கொரோனா காலகட்டத்தில் நாம் மாஸ்க் அணிந்து நம் உயிரைப் பாதுகாத்துக் கொண்டோம். கொரோனா வைரஸ் போன்று  காசநோய் வைரசும்   நுரையீரலை பாதிக்கும். அதனால் நம்மை தற்காத்துக்கொள்ள வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும்.

                                       நாம் இருமும் போதும், தும்மும் போதும், கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும். மாஸ்க்  ரொம்ப முக்கியமான ஒன்றாகும். மாஸ்க் வாங்கும் செலவை யோசித்தால் நாம் மிக அதிக செலவு வேண்டும்.

                             ஆரம்ப சுகாதாரம் மற்றும் அரசு மருத்துவமனையில் காசநோய்க்கென தனி  டாக்டர் இருக்கிறார்கள். காசநோய்  டெஸ்ட் பண்ணவே ஒரு தனி ஆள் இருக்காங்க.

                               நம் தேவகோட்டை பகுதியில்  காட்டாஸ்பத்திரி என்று உள்ளது. அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கு தங்கி ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொள்ளலாம். அங்கு  ட்ரீட்மென்ட் எடுக்கும்போது  மாதம் ஆயிரம் ரூபாய் நமக்கு வழங்கப்படும். இவ்வாறு பேசினார்கள்.

                          மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும் பதில்கள் வழங்கப்பட்டது. ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

 படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் காசநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஆல் த சில்ட்ரன் தொண்டு நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் முன்னிலை வகித்தார். ரீடா அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் தேவகோட்டை  கணேசன் மாணவர்களிடம் காச நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார் .


வீடியோ : https://www.youtube.com/watch?v=DU8jpEn2AIo

No comments:

Post a Comment