எளிய அறிவியல் சோதனைகள்
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். அறிவியல் பயிற்சியாளர் அரங்குலவன்அறிவியல் உபகரணங்களை கொண்டு அறிவியல் சார்ந்த விளக்கங்களை நேரடி சோதனைகள் மூலம் செய்து காண்பித்து விளக்கினார்கள்.அமிலங்கள் மற்றும் காரங்கள், லிட்மஸ் சோதனை,குவி ஆடிகள் , குழி ஆடிகள் , பருப்பொருள்கள், கன அளவு போன்றவற்றை செய்து காண்பித்து தெளிவாக விளக்கம் அளித்தனர். மாணவர்கள் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.நிறைவாக ஆசிரிர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.அ .மு.மு. அறக்கட்டளையினர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
பட விளக்கம் ; சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் பயிற்சியாளர் அரங்குலவன் மாணவர்களுக்கு நேரடியாக அறிவியல் சோதனைகளை செய்து காண்பித்தனர்.
வீடியோ : https://www.youtube.com/watch?v=5fDWmrTratI
https://www.youtube.com/watch?v=JvSSIWZa_kg
No comments:
Post a Comment