Sunday, 7 December 2025

சதுரங்க பயிற்சி 

நிருவாக திறன்களை வளர்க்கும் சதுரங்க விளையாட்டு 

பயிற்சியாளர் தகவல் 







 தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சதுரங்க விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது 

                                     ஆசிரியை முத்துமீனாள்   வரவேற்றார். தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். சதுரங்க பயிற்றுனரும் , நடுவருமான  விக்னேஷ் மாணவர்களுக்கு சதுரங்கம் விளையாடுவதனால்  ஏற்படக்கூடிய நன்மைகளையும், அதனால் நமது வாழ்க்கை திறன் மேம்பாடு குறித்தும் விரிவாக விளக்கினார் .

                                 அவர்   மாணவர்களிடம் பேசுகையில், நாம் சதுரங்கம் விளையாடுவதால் நம்முடைய மூளை நன்கு வளர்ச்சி அடையும். ஞாபகசக்தி அதிகரிக்கும். நம்முடைய வாழ்க்கை மேன்மை அடையும். 

                              நீங்கள்  இப்பொழுது சிறிய வகுப்புகளில் படிக்கிறீர்கள். போகப்போக 10, 12 என பெரிய வகுப்புகளில் படிக்க ஆரம்பிக்கும்போது உங்களுக்கு  நிறைய புரிதலில்  பிரச்சனைகள் ஏற்படும். அதையெல்லாம் போராடி ஜெயிக்க வேண்டும்.

                               நாம் என்ன செய்கிறோம் என்பது முக்கியமல்ல. நாம் முதலில் பிரச்சினைகளை சந்திக்க  கற்றுக் கொள்ள வேண்டும். நாம் சிறுவர்களாக இருக்கும்போது நமக்கு முடிவெடுக்க தெரியாது. பெற்றோர்கள், ஆசிரியர்கள் நமக்கு முடிவு எடுக்க உதவி செய்வார்கள். 

                                      நாம் பெரியவர்களாகுபோது நாமே முடிவெடுக்க வேண்டும். அதற்கு சதுரங்க விளையாட்டு உதவி செய்யும். நாம் எப்படி சதுரங்கத்தில் மூவ்  செய்கிறோம் என்று நம் புத்திக்கூர்மையை உபயோகப்படுத்தி யோசித்து விளையாடுகிறோம்.

                               நாம் சதுரங்க விளையாட்டில் எந்த இடத்தில் எதை வைக்கணும் என்று நாம் யோசித்து விளையாடுவது, நம் வாழ்க்கையில் நிர்வாகத் திறனை மேம்படுத்தவும் உதவவும்.

                                     நீங்கள் என்ன படித்திருந்தாலும் சதுரங்க விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அந்த ஆர்வம் ஏற்பட்டால் தான் நீங்கள் மிகப்பெரிய வெற்றி அடைய முடியும்.

                               சதுரங்கத்தில் ஆர்பிட்டர் தேர்வுகள் எழுதி நடுவர்களாக தேர்வாக முடியும். அது நமக்கு பல வகையிலும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். 

                               சதுரங்க விளையாட்டு நமக்கு நிறைய பிரச்சினைகளை கையாளும்  திறன்களை வளர்க்க உதவி செய்யும். இவ்வாறு நடுவர் சதுரங்க பயிற்சியாளர் நடுவர் விக்னேஷ் பேசினார்  மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பதில்கள் வழங்கப்பட்டது. ஆசிரியை ஸ்ரீதர் நன்றி கூறினார்.



படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சதுரங்க விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பள்ளி  தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். சதுரங்க பயிற்றுனர் , நடுவர் விக்னேஷ்  மாணவர்களுக்கு  சங்கத்தால் ஏற்படும் நன்மைகளையும் அதனால் நமது வாழ்க்கை மேம்படுவது தொடர்பாகவும் விரிவாக விளக்கினார். பெரிய மக்னென்ட் சதுரங்க அட்டையின் மூலமாக மாணவர்களுக்கு நேரடி செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. 



வீடியோ : https://www.youtube.com/watch?v=VQY_fW-rFRs




No comments:

Post a Comment