Monday, 15 December 2025

 பள்ளி  மாணவர்களுக்கான  மருத்துவ  முகாம் 








தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்    மாணவர்களுக்கான  மருத்துவ  முகாம் நடை பெற்றது.

                                     முகாமிற்கு வந்திருந்தோரை ஆசிரியர் ஸ்ரீதர்  வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.கண்ணங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கெவின்  ஆபிரகாம்,யாழிசை  ,கண் மருத்துவ அலுவலர் மகேஸ்வரி ,செவிலியர் உமாமகேஸ்வரி , மருந்தாளுனர் கனிமொழி   ஆகியோர்   பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களின் உடல்களையும் பரிசோதித்தார்.மாணவர்களிடம் உடல் சார்ந்த நோய்களை கண்டுபிடித்து அவற்றை உடனுக்குடன் எடுத்து கூறினார்கள்.மேலும் சில நோய்களுக்கு மேல் சிகிச்சைக்காக மாவட்ட அளவிலான அரசு மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரைத்தனர்.சில நோய்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டது.முகாமிற்கான ஏற்பாடுகளை மருத்துவ உதவியாளர்கள் ஷாஜஹான்  ,தேவதாஸ்   ஆகியோர்  செய்து இருந்தனர்.முகாமின் நிறைவாக ஆசிரியை முத்துமீனாள்   நன்றி கூறினார்.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்  மாணவர்களுக்கான  மருத்துவ  முகாம் நடை பெற்றது.

 வீடியோ : https://www.youtube.com/watch?v=bBYK0NJitCY

No comments:

Post a Comment