Saturday, 29 November 2025

 

பழைய இரு சக்கர வாகனங்களுக்கும்  மூன்று ஆண்டுகள் தொடர் இன்சூரன்ஸ்  



காரைக்குடி - நண்பர்களே நம்முடைய இருசக்கர வாகனங்களுக்கு நாம்  ஒரு ஆண்டிற்கு மட்டுமே இன்சூரன்ஸ் தொடர்ந்து செய்து வருகின்றோம்.

                          இந்நிலையில் சமீபத்தில் நாளிதழில் ஒரு ஆர்டிகல் படித்தேன். அதில் மூன்று ஆண்டுகள் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு இருசக்கர வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் செய்து கொள்ளலாம் என்று தகவல் இருந்தது.

                               அதன் அடிப்படையில் நான் இன்சூரன்ஸ் போட்டிருந்த அலுவலகத்தில் விசாரித்தேன். அவர்கள் ஒரு ஆண்டிற்கு மட்டும் தான் கொடுக்க முடியும் என்று மெயில் மூலம் பதில் தெரிவித்தார்கள். 

                                  மீண்டும் அவர்களுடைய வெப் சைட்டில் சென்று பார்த்தேன். வெப்சைட்டில் மூன்று ஆண்டுகள் மற்றும் ஐந்து ஆண்டுகள் லாங் பெரியட் இன்சூரன்ஸ் உண்டு என்று கொடுத்திருந்தார்கள். 

                                   அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து மீண்டும் அந்த நிறுவனத்திற்கு இ-மெயில் அனுப்பினேன். அவர்கள் எனக்கு மீண்டும் தகவல் தெரிவித்த பொழுது மூன்றாண்டுகளுக்கு பிரிமியம் செலுத்தி கட்டிக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்கள். 

                                ஆனால் இது சாதரணமாக எனக்கு கிடைக்கவில்லை. சில  முறை அவர்களுக்கு மெயில் அனுப்பி அதன்பிறகு அவர்கள் ஏற்றுக்கொண்டு ,  அதில் நானும் சம்மதம் தெரிவித்து உடனடியாக மூன்று ஆண்டுகளுக்கு எனது இன்ஷூரன்ஸை தொகையை செலுத்தி இன்சூரன்ஸ் பெற்றுவிட்டேன். 

                                 இங்கே குறிப்பிடத்தக்கது எனது வண்டி வாங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த வண்டிக்கு தான் நான் தற்பொழுது இன்சூரன்ஸ் மூன்று ஆண்டுகளுக்கு செய்து உள்ளேன்.

                               நீங்கள் பொதுவாக ஏஜெண்டை தொடர்பு கொள்ளும்பொழுது பழைய வண்டிக்கு செய்துகொள்ள முடியாது என்று கூறுவார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. 

                                பழைய வண்டிகளுக்கும் மூன்று ஆண்டுகள் இன்சூரன்ஸ் செய்து கொடுப்பதற்கான ஆப்ஷன்கள் உள்ளது. அதனை நாம் தான் கேட்டுப் பெற வேண்டும். 

                                எனவே இரு சக்கர வாகனம் வைத்து உள்ளவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு இன்சூரன்ஸ் செலுத்துவதற்கு உங்க ஏஜ்ண்ட்டிடம்   கேட்டு நீங்கள் சார்ந்திருக்கும் நிறுவனத்தில் அதனை புதுப்பித்துக் கொள்ளுங்கள்.

                                   வருடம்தோறும் செய்யும்போது நாம் மறந்துவிட வாய்ப்புள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ந்து ஒரே தவணையாக பாலிசி எடுக்கும்போது பிரிமியம் ஓரளவிற்கு குறைகிறது.இது போன்று சில நன்மைகள் உள்ளது.இதனை கேட்டு தான் பெற வேண்டும். 

நன்றி.

லட்சுமணன் 

காரைக்குடி 






No comments:

Post a Comment