வெப்ப நீள் விரிவு எவ்வாறு நிகழ்கிறது?
நேரடியாக கற்றுக்கொண்ட மாணவர்கள்
அறிவியல் சோதனைகள்
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எளிய அறிவியல் சோதனைகள் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். முருகப்பா அறிவியல் மைய பயிற்சியாளர்கள் தனசேகர், ஜோதி மீனாள் ஆகியோர் அறிவியல் உபகரணங்களை கொண்டு அறிவியல் சார்ந்த விளக்கங்களை நேரடி சோதனைகள் மூலம் செய்து காண்பித்து விளக்கினார்கள். வெப்ப மூலங்கள் ,வெப்ப நீள் விரிவு, அலையின் இயக்கத்தின் பண்புகள், ஒலியின் பண்புகள், ஒலி பரவுதல், ஒலி உருவாதல் உள்ளிட்ட அறிவியல் பயன்பாடு தொடர்பான செயல்முறைகள் போன்றவற்றை செய்து காண்பித்து தெளிவாக விளக்கம் அளித்தனர். மாணவர்கள் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.நிறைவாக ஆசிரியை வள்ளி மயில் நன்றி கூறினார்.முருகப்பா அறிவியல் மையம் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
பட விளக்கம் ; சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் முருகப்பா அறிவியல் மைய பயிற்சியாளர்கள் தன சேகர்,ஜோதி மீனாள் ஆகியோர் மாணவர்களுக்கு நேரடியாக அறிவியல் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வுகளை நடத்தினார்கள்.
வீடியோ :
https://www.youtube.com/watch?v=SKXdSr7ogIw
https://www.youtube.com/watch?v=-jOhZ7DqnGw
No comments:
Post a Comment