பேரிடர் மேலாண்மை பயிற்சி
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தீயணைப்பு துறையின் சார்பாக பேரிடர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது .
ஆசிரியை முத்துமீனாள் அனைவரையும் வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை தீயணைப்பு துறை அலுவலர்கணேசன் விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்வது எப்படி என்பதை நேரடி செயல் விளக்கத்தின் மூலம் செய்து காண்பித்து விளக்கினார்.
நிகழ்வில் தேவகோட்டை தீயணைப்பு - மீட்பு பணிகள் நிலையத்தை சார்ந்த முன்னனி தீயணைப்போர் ஆறுமுகம் , தீயனைப்போர் நாக கார்த்திக் ,சொக்கலிங்கம், விக்னேஷ்குமார் ஆகியோர் விழிப்புணர்வு வழங்கினார்கள் . நிறைவாக ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.
பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தீயணைப்பு துறையின் சார்பாக பேரிடர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது . முதலுதவி செய்வது எப்படி என்பதை நேரடி செயல் விளக்கத்தின் மூலம் தீயணைப்பு அலுவலர் கணேசன் குழுவினர் செய்து காண்பித்தார்கள் .
வீடியோ : https://www.youtube.com/watch?v=xWxveHPztgQ
No comments:
Post a Comment