Wednesday, 31 December 2025

 ஆங்கில புத்தாண்டே  வருக ! நலம் எல்லாம் தருக !  என ஆங்கில வருடபிறப்பை பலூன் பறக்க விட்டு,கவிதை பாடி  வரவேற்கும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்  பள்ளி மாணவிகள் 





Tuesday, 30 December 2025

 நண்பர்களே வணக்கம் 🙏 

2025 சிறப்பாக நிறைவு பெறுகிறது..


வரும் 2026 ஆண்டு மேலும் சிறப்புடன் அமைய வாழ்த்துகள் 💐💐💐



ந.க எண் ( R C No)

ஓ.மு எண் ( L Dis No)

(ஓராண்டு முடியும் எண்)

மூ.மு எண் ( K Dis No)

மூன்றாண்டு முடியும் எண்) 

ப.மு. எண் ( D Dis No)

(பத்தாண்டு முடியும் எண்)

நி.மு.எண் ( R Dis / N Dis) 

( நிரந்தரம்) 

என பல்வேறு வகையான பிரிவுகள் இருந்தாலும் நாம் பள்ளி அளவில்


 *ந.க.எண்* 

 ( நடப்பு கட்டு எண்) 

 *R.C No* 

 ( Current Running Number) மட்டுமே பயன்படுத்தி வருகிறோம்...


தன் பதிவேட்டில் 

 1/1/26 முதல் 

புது ந.க.எண் இட வேண்டும்...


நான் பார்த்த வரையில் சில பள்ளிகளில்..

1/6 (ஜுன்) முதல் 1/2026 என ந.க.எண் இடும் நடைமுறை பின்பற்றுகிறார்கள் ...


அதேபோல் சிலர் 

ந.க.எண் 

1/2025-26 என்றும் பயன் படுத்தி வருகிறார்கள்...


ந.க.எண் கல்வி ஆண்டு அடிப்படையில் கிடையாது...


இது சரியல்ல...


தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும்

 *1/1 முதல் தான் புதிய ந.க.எண்* இடப்படும் நடைமுறை...


எனவே பள்ளிகளிலும் நாளை 1 ஜனவரி 2026 முதல்



ந.க.எண் 1/2026 நாள் 2/1/26... 

என்பது போல புதிய 

ந.க.எண் இடப் படவேண்டும்...


ஒரே பொருள் சார்ந்து ஏற்கனவே இடப் பட்ட ந.க.எண் ஐ பயன்படுத்தி கொள்ளலாம்...


எ.கா 2025 நவம்பரில் 123 /2025 என SSLC தேர்வு சார்ந்த கடிதம் எனில்...

ஜனவரியில் அதே பொருள் சார்ந்து எனில்

123 /2025 நாள் 6/1/26 என பயன் படுத்தலாம்

புதிய ந.க எண் இட வேண்டும் என்று இல்லை..


இதை சிலர்...


ந.க.எண் 123 / *2026* நாள் 6/1/26 என்றும் இடுகிறார்கள் அதாவது பழைய ந.க.எண் ஆனால் ஆண்டு /2026 என பதிவு செய்கிறார்கள் இதுவும் குழப்பத்தை ஏற்படுத்தும்..


அதே பொருள் சார்ந்த பதிவு முடியும் வரை அதே ந‌.க.எண் பயன்படுத்தி வரலாம்

கடித நாள் மட்டும் மாறுபடும்....


அலுவலக நகல் (o/c) எப்போதும் பராமரிக்க வேண்டும்...


தன் பதிவேட்டிலும் பதிவுகள் உடனுக்குடன் செய்வது நன்று...


இடைச்செருகல் 43A/2026 போன்றவை சரியானவை கிடையாது...


இடைச்செருகல் A , B... என வழங்குவது குழப்பத்தை ஏற்படுத்தும்..  


பள்ளிகளில் தன்பதிவேடு மட்டுமே பராமரிப்பு செய்யப்படுகிறது...


( அலுவலகத்தைத் போல பகிர்மான பதிவேடு inward outward register / periodical register எல்லாம் இல்லை)...


தகவலுக்காக.

 *க.செல்வக்குமார்* 

தலைமை ஆசிரியர்

அரசு மேல்நிலைப் பள்ளி

மோ சுப்புலாபுரம்

மதுரை மாவட்டம் 🙏

31/12/25

Saturday, 27 December 2025

 28/12/2025   இன்றைய தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவர்கள்        -  இன்றைய  தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள்       வரைந்த    ஓவியங்கள்    வெளியாகி உள்ளது.


Thursday, 25 December 2025

 படிக்க புத்தகமும் வழங்கி பரிசும் அறிவித்த பள்ளி


பள்ளி  விடுமுறையில் மாணவர்கள் வாசிப்பை மேம்படுத்த புதிய முறைகள் 



Thursday, 18 December 2025

 எளிய அறிவியல் சோதனைகள் 






Tuesday, 16 December 2025

 *🛑🔴🟢சதுரங்க பயிற்சி* தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் எவ்வித கட்டணமும் இல்லாமல் வாரம் தோறும் இலவசமாக தொடர்ந்து சதுரங்க பயிற்சி நடைபெற்று வருகின்றது





 *🛑🔴🟢சதுரங்க பயிற்சி* தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் எவ்வித கட்டணமும் இல்லாமல் வாரம் தோறும் இலவசமாக தொடர்ந்து சதுரங்க பயிற்சி நடைபெற்று வருகின்றது






Monday, 15 December 2025

 எங்க   வங்கியில் வீட்டு கடனுக்கான வட்டி விகிதம் இன்று (EXISTING CUSTOMER)  குறைப்பு  எவ்வளவு ? நீங்கள் லோன் வாங்கி உள்ள வங்கியில் சென்று செக் செய்து பாருங்கள்.





 பள்ளி  மாணவர்களுக்கான  மருத்துவ  முகாம் 







Sunday, 14 December 2025

 *🛑🟢🔴இசை பயிற்சி* தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் எவ்வித கட்டணமும் இல்லாமல் வாரம் தோறும் இலவசமாக தொடர்ந்து இசை பயிற்சி நடைபெற்று வருகின்றது











Saturday, 13 December 2025

  14/12/2025   இன்றைய தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவர்கள்        -  இன்றைய  தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள்       வரைந்த    ஓவியங்கள்    வெளியாகி உள்ளது.


*🛑🟩🟪சிவகங்கையில் ஜாக்டோ ஜியோ பட்டினி போராட்டம்*
*பழைய பென்ஷன் திட்டத்தை வலியுறுத்தி ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் அலைகடலனே திரண்ட ஜாக்டோ - ஜியோ உறுப்பினர்கள் - சிவகங்கை அரண்மனை வாசல் அருகில் - ஒரு நாள் பட்டினி போராட்டத்தில் தோழர்கள் பாண்டியராஜன், அழகப்பன் ஆகியோருடன் பங்கேற்ற மகிழ்வான தருணம் - விடுமுறை நாளன்றும் ஏராளமான பெண்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.தகவல் லெ .சொக்கலிங்கம், தலைமை ஆசிரியர், சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி, தேவகோட்டை.*


 

Friday, 12 December 2025

   பாரதியார் விழா

மாணவிகள் கவிதை கூறி அசத்தல் 





Wednesday, 10 December 2025

 பள்ளியில் பாயசம் 

மாதத்தில் இரண்டு நாட்கள் பள்ளி ஆசிரியர்கள் சார்பில் மதிய சத்துணவுடன் பாயசம் வழங்கப்படுகிறது.

சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை.