Sunday 30 April 2023

 படிக்க புத்தகமும் வழங்கி பரிசும் அறிவித்த பள்ளி


பள்ளி  விடுமுறையில் மாணவர்கள் வாசிப்பை மேம்படுத்த புதிய முறைகள் 

 கோடை விடுமுறையில் மாணவர்கள் வீடுகளில் படிக்க  புத்தகம் வழங்கி அசத்திய பள்ளி 

புத்தகங்கள் படிக்கும் மாணவர்களுக்கு பரிசு அறிவிப்பு 










தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் படிக்க பள்ளியின் சார்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

                                 தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையை  பயனுள்ளதாக மாற்றும் வகையில் ஒவ்வொரு மாணவரும் படிக்கும் வகையில் மாணவர்களின் வீட்டுக்கு நான்கு ,நான்கு புத்தகங்கள் கொடுத்து படிக்க சொல்லி பேசும்போது ,தமிழக அரசு மாணவர்களின் நலன் கருதி அதிக அளவில் ஊர்புற நூலகங்களை திறந்துள்ளது.நூலகங்களில் அரியவகை புத்தகங்கள் அதிக அளவில் உள்ளன . கோடை விடுமுறையில் புத்தகங்களையும்,நூலகங்களையும் மாணவர்கள் பயன்படுத்தி அறிவை பெருக்கி கொள்ள வேண்டும் என்று பேசினார்.புத்தகம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் கருப்பையா ,ஸ்ரீதர், முத்து லெட்சுமி,செல்வமீனாள் ஆகியோர் செய்து இருந்தனர்.மாணவர்களுக்கு புத்தகம் படிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகங்களில் படித்ததை கேட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் படிக்க பள்ளியின் சார்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment