Thursday 27 April 2023

 வாசிப்பு வாழ்க்கையில் மிக முக்கியம் 

உயர்ந்த குறிக்கோளை அடைய முயற்சி செய்யுங்கள் 

நகராட்சித் தலைவர் பேச்சு 

100க்கும் மேற்பட்ட  நூலக புத்தகங்கள் படித்த மாணவிக்கு ரூபாய் 2000 பரிசு வழங்கி பாராட்டு 

 





 

தேவகோட்டை -  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட நூலக புத்தகங்களை படித்த மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

                          ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.  இளம்வயதில் 100க்கும் மேற்பட்ட நூலக புத்தகங்களை படித்து அதன் கருத்துக்களை எடுத்துக் கூறிய எட்டாம் வகுப்பு மாணவி திவ்யஸ்ரீக்கு  தேவகோட்டை நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் ரூபாய் இரண்டாயிரம் பரிசும், பொன்னாடையும், புத்தகமும் பரிசாக வழங்கி பேசும்பொழுது,  புத்தகங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமானது. இளமையில் வாசிக்க, வாசிக்க நமக்கு வாழ்க்கை மிகவும் வசப்படும். வாசிப்பை நேசிப்போம். பெற்றோர்களால் செல்வத்தை மட்டும் தான் கொடுக்க முடியும். ஆனால் அது நமக்கு நிரந்தரம் ஆகாது. பெற்றோர்களால் நமக்கு வழங்கப்படும் கல்வி தான் மிக முக்கியமானது. கல்விதான் நமது வாழ்க்கையில் மிகப் பெரிய சொத்து ஆகும். எனவே அனைவரும் நல்ல முறையில் புத்தகங்களை வாசிக்க கற்றுக்கொள்ளுங்கள். மிகப் பெரிய இலக்குகளை உருவாக்கி, அதனை நோக்கி உங்களது வாழ்க்கையை செயல்படுத்துங்கள் என்று பேசினார். ஆசிரியை செல்வமீனாள்  நன்றி கூறினார்.

 பட விளக்கம்:  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட நூலக புத்தகங்கள் படித்த மாணவி திவ்யஸ்ரீக்கு  பாராட்டு விழா நடைபெற்றது. தேவகோட்டை நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் தலைமை தாங்கி மாணவி திவ்யஸ்ரீக்கு  ரூபாய் 2000 பரிசும் ,பொன்னாடையும் அணிவித்து பாராட்டினார் .பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.

 

வீடியோ :  

https://www.youtube.com/watch?v=rovMg-NM1Us

  https://www.youtube.com/watch?v=C2Wiujj-Pwk

 https://www.youtube.com/watch?v=nAVZjQ906Jg

 

 



No comments:

Post a Comment