Tuesday 7 February 2023

அழகு குறைந்து விடும் என்று எண்ணி தாய்ப்பால் கொடுக்காவிட்டால் புற்றுநோய் வரலாம் 

புகை பிடிப்பதை விடுவோம் -  புற்றுநோயை தவிர்ப்போம்

புற்று நோய் விழிப்புணர்வு முகாமில் தகவல் 










தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்நடுநிலைப் பள்ளியில் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

                                                                   ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.அன்பு பாராமெடிக்கல் கல்வி நிறுவனத்தின் துணை முதல்வர் பிரதீபா , ஒருங்கிணைப்பாளர் செல்வராணி ஆகியோர் புற்றுநோய் விழிப்புணர்வு தொடர்பாக பேசினார்கள்.இக்கல்வி நிறுவனத்தின் மாணவிகள் நாடகம் மற்றும் கலந்துரையாடல் வாயிலாக புற்றுநோய் விழிப்புணர்வு, தன்சுத்தம் பேணுதல், பெண்களின் மெனோபாஸ் காலத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், நோய்கள் வராமல் இருக்க கை கழுவும் முறைகள் போன்றவற்றை பள்ளி மாணவ,மாணவியருக்கு புரியும் வகையில் தெளிவாக விளக்கினார்கள். பல இளம் வயது தாய்மார்கள் அழகு குறைந்து விடும் என்பதற்காக தாய்ப்பால் கொடுக்காமல் விட்டு விடுகிறார்கள்.இவர்களுக்கு புற்று நோய் வரும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார்கள்.ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.


படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்நடுநிலைப் பள்ளியில் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.அன்பு பாராமெடிக்கல் கல்வி நிறுவனத்தின் துணை முதல்வர் பிரதீபா , ஒருங்கிணைப்பாளர் செல்வராணி ஆகியோர் புற்றுநோய் விழிப்புணர்வு தொடர்பாக பேசினார்கள்.மாணவ,மாணவியரின் நாடகம்,கலந்துரையாடல் நடைபெற்றது.



வீடியோ : 

https://www.youtube.com/watch?v=gFAm2njoCtE

https://www.youtube.com/watch?v=Qx0vESvEOXs




No comments:

Post a Comment