Thursday 16 February 2023

 

இஸ்ரோவின் எஸ்.எஸ்.எல்.வி - டி 2 திட்டம் வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு

 


தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) எஸ்.எஸ்.எல்.வி-டி2 ராக்கெட் மூலம் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உள்பட 3 செயற்கைக் கோள்களை  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள்  பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
                                                 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டு,
3 செயற்கைக் கோள்களும் பூமியைச் சுற்றி 450 கி.மீ புவி வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் முதல் முறையாக சிறிய வகை செயற்கைக்கோள்களை ஏவும் எஸ்.எஸ்.எல்.வி திட்டம் வெற்றி பெற்றுள்ளது .புவியை கண்காணிக்கும் செயற்கைக்கோள் ஈஓஎஸ்-7  உட்பட மூன்று செயற்கைகோள்கள் என்கிற தகவலை  பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மாணவர்களுக்கு  எடுத்து கூறினார்.இந்த சாதனையை செய்த இஸ்ரோவின் அனைத்து விஞ்ஞானிகள்,பொறியாளர்கள்,தொழில்நுட்ப ஊழியர்கள் அனைவருக்கும் பள்ளி மாணவர்களால் வண்ண பலூன் பறக்கவிடப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர், செல்வமீனாள் ஆகியோர் செய்து இருந்தனர்.இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரிய,ஆசிரியைகள்,மாணவ,மாணவியர்கள் பங்கேற்றனர்.

பட விளக்கம்: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) எஸ்.எஸ்.எல்.வி-டி2 ராக்கெட் மூலம் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உள்பட 3 செயற்கைக் கோள்களை  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள்  பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

வீடியோ :

 https://www.youtube.com/watch?v=JLle5nK8yUs

 

 


No comments:

Post a Comment