Wednesday 1 February 2023

 வாசித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி அசத்திய பள்ளி 


 படித்தததற்கு பரிசாக புத்தகம் வழங்கிய பள்ளி 

விடுமுறையில் வாசித்த மாணவர்களுக்கு பரிசு
பள்ளி  விடுமுறையில் மாணவர்கள் வாசிப்பை மேம்படுத்த புதிய முறைகள் 





 


 தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம்  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விடுமுறையில் புத்தகம் வாசித்த மாணவர்களுக்கு  புத்தகங்கள்  பரிசாக வழங்கப்பட்டது.

                                பள்ளி  தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம்  பருவ விடுமுறையை  பயனுள்ளதாக மாற்றும் வகையில் ஒவ்வொரு மாணவரும் படிக்கும் வகையில் மாணவர்களின் வீட்டுக்கு நான்கு ,நான்கு புத்தகங்கள் கொடுத்து படிக்க சொல்லி ஆலோசனை வழங்கினார்கள்.விடுமுறையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகங்களில் படித்ததை கேட்டு  சிறப்பாக பதில் கூறிய மாணவ,மாணவியர் நந்தனா,திவ்யஸ்ரீ,அஜய்,கனிஸ்கா,தனலெட்சுமி     ஆகியோருக்கு பரிசுகளை  பெற்றோர்கள் வழங்கினார்கள்.பரிசு வழங்க ஏற்பாடுகளை ஆசிரியர்கள் கருப்பையா ,ஸ்ரீதர், முத்து லெட்சுமி, செல்வமீனாள் ஆகியோர் செய்து இருந்தனர்.மாணவர்களுக்கு புத்தகம் படிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும்போது ,மாணவர்களிடம் படித்ததை கேட்கும்போது அவர்களும் ஆர்வத்துடன் பதில் சொன்னது பாராட்டுக்குரியது.தொடந்து பல ஆண்டுகளாக ஒவ்வொரு பள்ளி விடுமுறையிலும் பயனுள்ள வகையில் மாணவர்களின் வீடுகளுக்கு புத்தகங்கள் வழங்கி படிக்கச் செய்து பரிசுகளும் வழங்குவது மாணவர்களிடம் வசிக்கும் பழக்கத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளியில் இரண்டாம் பருவ   விடுமுறையில் வாசித்த மாணவர்களுக்கு பெற்றோர்கள்   பரிசுகளை    வழங்கினார். 
தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
 
வீடியோ :
 
 https://www.youtube.com/watch?v=NLlw39LupyU
 
 
 https://www.youtube.com/watch?v=NgQbo6U1Mjg

No comments:

Post a Comment