Monday 27 February 2023

 தேசிய அறிவியல் தின விழா 











தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின நிகழ்வு  கொண்டாடப்பட்டது.
                              நிகழ்வில்  ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.அ .மு.மு.அறக்கட்டளை அறிவியல்  பயிற்சியாளர்கள் சேகர், அரங்குவளன் ஆகியோர் முன்னனிலை வகித்தனர்.பறக்கும் யானை,தராசு,காற்றின் அழுத்தம்,மடிக்கணினி,நீரின் அடர்த்தி,வெப்ப சலனம்,ஊசி துளை கேமிரா,ஒளியின் பாதை,நீர் பாயும் தன்மை போன்ற அறிவியல்  சோதனைகளை நேரடியாக மாணவர்களே  செய்து காண்பித்து விளக்கம் அளித்தனர்.மாணவர்கள் அஜய், ஆகாஷ், பிரஜித்,திவ்யஸ்ரீ ஆகியோர் அறிவியல் தினம் தொடர்பாக பேசினார்கள்.நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் ஸ்ரீதர்,கருப்பையா செய்து இருந்தனர்.நிறைவாக ஆசிரியை முத்து லெட்சுமி  நன்றி கூறினார்.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தினை முன்னிட்டு மாணவர்களே அறிவியல் சோதனைகளை செய்து காண்பித்து அசத்தினார்கள்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.அ .மு.மு.அறக்கட்டளை அறிவியல்  பயிற்சியாளர்கள் சேகர், அரங்குவளன் ஆகியோர் முன்னனிலை வகித்தனர்.
 
வீடியோ : 
 https://www.youtube.com/watch?v=_0gf7dPy1qs
 
 https://www.youtube.com/watch?v=6VnZ5KUVgAI
 
 

No comments:

Post a Comment