Tuesday 30 November 2021

 அப்துல்கலாமின் எளிமையை கடைபிடியுங்கள் - உங்கள் வேலைகளே நீங்களே செய்ய கற்றுக்கொள்ளுங்கள் - பள்ளி முதல்வர் பேச்சு 



























 

நல்வழி பாடல்களில் முதல் பரிசு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

தேவகோட்டை  - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்  இணையம் வழியாக நடைபெற்ற நல்வழி பாடல்களில் முதல் பரிசு பெற்ற மாணவர்களுக்கு தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பரிசு வழங்கி பாராட்டினார்.

                        ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.இணையம் வழியாக நடைபெற்ற நல்வழி பாடல்கள் ஒப்புவித்தல் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவர்களுக்கும், பங்கேற்றவர்களுக்கும் சான்றிதழ்களையும் ,பரிசுகளையும் தேவகோட்டை தே  பிரித்தோ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி  வழங்கி பாராட்டி பேசுகையில் , மாணவர்கள் அப்துல்கலாம் போன்று எளிமையான வாழ்க்கை வாழவேண்டும்.ஒலிம்பிக்கில் வெற்றி பெற்று முதல்  பரிசினை பிரித்துக்கொண்டவர்கள் போல் அன்புடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசினார்.நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.  சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.இணையம் வழியாக மிகச் சிறப்பாக நடைபெற்ற இப்போட்டியை ஒருங்கிணைத்த திருவள்ளூர் மாவட்ட   நிர்வாகி சாந்தகுமாரி,  அபிலாஷ் ,சிவலெட்சுமி ஆகியோருக்கும்  வாழ்த்து தெரிவிக்கப்பட்டது .

படவிளக்கம் :  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்  இணையம் வழியாக நடைபெற்ற நல்வழி பாடல்களில் முதல் பரிசு பெற்ற மாணவர்களுக்கு தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி பரிசு வழங்கி பாராட்டினார்.

 

 வீடியோ 

 https://www.youtube.com/watch?v=dUcTMkzFSKs

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment