Monday 1 November 2021

ஆரத்தி எடுத்து மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள் - நடுநிலை   ப்பள்ளி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

 


 










தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் 19 மாதங்கள் கழித்து பள்ளிக்கு வருவதால் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்து பள்ளிக்குள் வரவேற்கப்பட்டனர்..

                                        இப்பள்ளியில்   குழந்தைகளுக்கு ஆரத்தி எடுத்து, கடலை அச்சு ,மரக்கன்றுகள், ரோஜா பூ கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

                                 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்த நிலையில் 19, மாதங்களுக்கு பிறகு 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.  தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து இன்று அனைத்து பள்ளிகளிலும் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். அந்தவகையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,கருப்பையா,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி ஆகியோர் மாணவர்களுக்கு ஆரத்தி எடுத்து , கடலை மிட்டாய், ரோஜா பூ ,மரக்கன்றுகள் வழங்கி ஆர்வத்துடன் வரவேற்றனர்.

                                    ஆசிரியர்கள் கை கழுவும் திரவம் , முக கவசம் மற்றும் பூக்கள் கொடுத்து  இனிப்புகள் கொடுத்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். சுமார் 19 மாதங்கள் கழித்து பள்ளிக்கு வருவதால் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்து பள்ளிக்குள் வரவேற்கப்பட்டனர்.பள்ளியில் வாழை மரங்கள் கட்டப்பட்டு, தோரணங்கள்,வண்ண தாள்களால் அலங்கரிக்கப்பட்டு பள்ளியே விழாக்கோலம் பூண்டு இருந்தது.மாணவர்களும் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வருகை புரிந்து மரக்கன்றுகள் நட்டனர்.

பட விளக்கம் : 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் 19 மாதங்கள் கழித்து பள்ளிக்கு வருவதால் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,கருப்பையா,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி ஆகியோர் மாணவர்களுக்கு ஆரத்தி எடுத்து , கடலை மிட்டாய், ரோஜா பூ ,மரக்கன்றுகள் வழங்கி ஆர்வத்துடன் வரவேற்றனர்.

 

வீடியோ : https://www.youtube.com/watch?v=vXwEScRxhps

 

 

No comments:

Post a Comment