Sunday 27 December 2020

எந்தவொரு நிகழ்வுக்கும் திட்டமிடுதலே முதல் வெற்றி 

ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்  

























 

தேவகோட்டை -  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார தேர்தல் மாவட்டத்திலேயே முதலாவதாக தேவகோட்டை வட்டார கிளையில் நடைபெற்றது. இந்த தேர்தல் ஜனநாயக முறைப்படி மிக நேர்த்தியாக நடைபெற்றது . 

சிறப்பான முறையில் திட்டமிடுதல் :

             தேர்தலுக்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் வட்டார நிர்வாகிகள் இணைந்து பெரும் முயற்சி எடுத்து செய்திருந்தார்கள். ஸ்தாபன  விதிப்படி முறையாக 15 நாட்களுக்கு முன்பாக பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு தேர்தலுக்கு முன்பாக இரண்டு செயற்குழு கூடி ஆலோசனை செய்து அதன் பிறகே தேர்தல்  ஜனநாயக முறைப்படி நடைபெற்றது. தேர்தல் நடக்க வேண்டியதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் வட்டார நிருவாகிகள் அனைவரும் இணைந்து திட்டமிட்டு மிகச் சிறப்பாக செய்திருந்தார்கள். தேர்தல் அன்று அனைத்து நிர்வாகிகளும் நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுத்திருந்தனர் . 

சிறப்பாக செயல்பட்ட தேர்தல் ஆணையாளர்கள் :

               சிவகங்கையிலிருந்து வட்டார தேர்தல் ஆணையாளராக வந்திருந்த பாஸ்கரன், பஞ்சு ராஜு ஆகியோரும் மிக அருமையான முறையில் பல்வேறு தகவல்களை எடுத்துக் கூறி தேர்தலை முறைப்படி நடத்தினார்கள். 

அறுசுவைவுடன் மதிய உணவு :

               மதிய உணவும் மிக அருமையாக ஏற்பாடு செய்து இருந்தார்கள். அதற்காக முன்கூட்டியே திட்டமிட்டு ஆசிரியர்  அருள்தாஸ் அவர்களின் உதவியுடன்  அறுசுவை உணவாக மதிய விருந்து தயார் ஆகி இருந்தது. மொத்தத்தில் தேர்தல் என்பது இப்படித்தான் நடக்க வேண்டும் என்பதை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இயக்கம் மிக சிறப்பாக செய்திருந்தது. தேர்தல் நிகழ்வு 10:30 மணிக்கு எல்லாம் துவங்கி ஒரு மணிக்குள் அனைத்து நிகழ்வுகளும்  முடிக்கப்பட்டு இரண்டு மணிக்குள் மதிய அறுசுவை உணவு வழங்கப்பட்டது பாராட்டுக்குரியது. 

நிகழ்வை செயல்படுத்துவதில் உள்ள ஆளுமை தன்மை :

              இன்றைய நிலையில் ஒரு நிகழ்வை எடுத்து செய்வது என்பதும்,அதனில் பங்கேற்கும் பெரும்பாலானோரை திருப்தியாக இருந்தது என்றும் சொல்ல வைப்பதும் மிகப்பெரிய விஷயமாகும்.நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வது,திட்டமிடுவது,நிகழ்ச்சியை பற்றியே பல நாட்கள் சிந்திப்பது,அதனை வெற்றிகரமாக முடிப்பது என்பது சாதாரண விசமயல்ல.அது ஒரு மிகப்பெரிய ஆளுமை தன்மையாகும்.சில நேரத்தில் சில இடர்பாடுகள்,   அதனாலெல்லாம் சோர்ந்து போகாமல் தொடர்ந்து நிகழ்வை வெற்றிகரமாக செயல்படுத்துவது என்பது பாராட்டுக்குரியது.

தோழர் புரட்சி தம்பிக்கும், தோழர் சத்யவாணி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் :

              அது போன்ற சூழ்நிலையில் மிக குறைந்த நேரத்திலும் மிக நேர்த்தியான ஏற்பாடுகளை தேர்தலுக்கு முதல் நாள் முதலே இருந்தும், தேர்தல் முடிந்த பிறகும்  இறுதி வரை இருந்து அனைத்து பொருள்களையும் சரியான முறையில் எடுத்து சேர்த்து முக்கிய பங்கு வகித்த தோழர் புரட்சி தம்பியும், அவரது மனைவி தோழர் சத்திய வாணியும் , தோழர் பாஸ்கரனும்  மற்ற நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களை,  பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

புதிய நிருவாகிகளுக்கு சிறப்பாக செயல்பட மனமார்ந்த வாழ்த்துக்கள் :

                 புதிய நிர்வாகிகள்   தலைவர் ராஜம்மாள்,  செயலர் ஆரோக்கியசாமி,பொருளாளர் பாஸ்கரன் ஆகியோர்  மிகச் சிறப்பாக  இந்த ஆண்டு தங்களது பணியைச் செய்திட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த  இயக்கத்தினுடைய தூண்கள்  அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.இயக்கம் தொடர்பாகவும்,அனைத்து ஆசிரியர்களும் இயக்கத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்றும்,அப்போதுதான் நமது கோரிக்கைகளை வென்று எடுக்க இயலும் என்றும் தெளிவாக நிகழ்வில்  அனைவருக்கும் புரிய வைத்தனர்.

சிந்திக்க வைத்த உரை :

          தோழர் புரட்சி தம்பி அவர்கள் பேசும்போது, தேவகோட்டையில் TNPTF கூட்டணியின் வளர்ச்சி தொடர்பாகவும்,அதற்கான முயற்சிகள் தொடர்பாகவும் மிக தெளிவாக கருத்துக்களை எடுத்து கூறினார்.அன்னாரது உரை பல கருத்துக்களை குறிப்பாக TNPTF  இயக்கம் ஜாதி,மதம்,உறவுகள் தாண்டி ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி நிருவாகிகளை தேர்வு செய்வது குறித்து  தெளிவாக எடுத்துரைத்தார் .

 TNPTF கூட்டணியின் புதிய விதிகளின்படி பெண்களுக்கு நிருவாக பதவி :

        TNPTF கூட்டணியின் புதிய விதிகளின்படி நிருவாக பொறுப்பில் பெண் உறுப்பினர் ஒருவர் பதவிக்கு வரவேண்டும் என்று சமீபத்திய முடிவுகளின்படி அதனை செயல்படுத்தும் விதமாக பெண் ஒருவரை முக்கிய நிருவாக பொறுப்பில் தேவகோட்டை வட்டார கிளை தேர்தலில் தேர்ந்தெடுத்தது அருமையான செயல்பாடாகும்.தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள தோழர் ராஜம்மாள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

இயக்க தூண்களின் பாராட்டுகளுக்கு நன்றி :

            மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்திருந்த இயக்கத்தின் தூண்கள் அனைவரும் தேவகோட்டையில் TNPTF இயக்கத்தின் செயல்பாடுகள் நல்ல முறையில் இருப்பதாக பாராட்டு தெரிவித்தனர். கூட்டு முயற்சியே வெற்றி தரும் என்பதை அனைவரின் ஒத்துழைப்பும் நிரூபித்தது.மீண்டும் ஒருமுறை புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். 

ஒன்றுபடுவோம்!போராடுவோம்!வெற்றிபெறுவோம் ! இறுதி வெற்றி நமதே என்கிற கோஷத்துடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது .

 தோழமையுடன் ,

லெ .சொக்கலிங்கம்,

TNPTF ,

வட்டார துணைத்தலைவர் ,

தேவகோட்டை .

சிவகங்கை மாவட்டம்.

8056240653.

 


No comments:

Post a Comment