Monday 28 December 2015

மண்டல அளவில் நடைபெற்ற ஓவிய  போட்டியில் 

தேவகோட்டை பள்ளி மாணவி சாதனை 


தனியார் பள்ளிகளுக்கு இணையாக போட்டி போட்டு வெற்றி பெற்ற அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி


    தேவகோட்டை- திருச்சி தேசிய  அண்ணா கோளரங்கத்தில்  திருச்சி மண்டல மின்சார வாரியம் சார்பில் சார்பில் நடைபெற்ற மண்டல அளவிலான ஓவிய போட்டியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி வெற்றி பெற்று பரிசு பெற்றார்.  

 
                         
          இப்போட்டிகளில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர். இதில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி 7ம் வகுப்பு மாணவி தனலெட்சுமி போட்டியிட்டு மண்டல அளவில் இரண்டாம் பரிசினை பெற்று வெற்றி பெற்றார். இப்பள்ளியில் இருந்து கலந்துகொண்ட 8 மாணவர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.காலை 5மணிக்கெல்லாம் தேவகோட்டையில் கிளம்பி மாணவர்களை பேருந்து மூலம் திருச்சிக்கு ஆசிரியை அழைத்து சென்றார்.சுமார் 70க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் மண்டல அளவில் இம்மாணவி வெற்றி பெற்றுள்ளார்..சிவகங்கை,ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட ஒரே பள்ளி இது மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.இப்போட்டிகளுக்கு மாணவிகளை தயார்செய்த ஆசிரியை முத்து லெட்சுமி ,ஊக்க படுத்தி அழைத்து சென்ற பெற்றோரையும்,பரிசு பெற்ற மாணவிகளையும்,
பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்தனர். பல்வேறு தனியார் பள்ளிகளுக்கு இடையே போட்டி போட்டு அரசு உதவி பெறும்  பள்ளியான இப்பள்ளி மாணவி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

 பட விளக்கம் :  IMG - 0107   திருச்சி மண்டல அளவில் மின்சார வாரியத்தின் சார்பாக நடைபெற்ற ஓவிய போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி தனலெட்சுமிக்கு பரிசினையும்,சான்றிதழையும்  திருச்சி  தேசிய அண்ணா கோளரங்க பொறுப்பு திட்ட இயக்குனர் லெனின் தமிழ் கோவன் வழங்கினார்.உடன் மாணவியின் தயார் மீனாள் .

பட விளக்கம் : IMG - 5115 திருச்சி மண்டல அளவில் மின்சார வாரியத்தின் சார்பாக நடைபெற்ற ஓவிய போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி தனலெட்சுமி மற்றும் பங்கேற்ற மாணவ,மாணவியர் சான்றிதல்களுடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்

No comments:

Post a Comment