Tuesday 22 December 2015

அகம் ஐந்து ,புறம் ஐந்து
மாணவர்களுக்கான ஆளுமை பயற்சி

அம்மா,அப்பா சொல்வதை நன்றாக கேட்போம் மாணவர்கள் உறுதி

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்  மாணவர்களுக்கான அகம் ஐந்து ,புறம் ஐந்து என்ற தலைப்பில் ஆளுமை தன்மை வளர்க்கும் பயற்சி நடைபெற்றது.



                                                    பயிற்சிக்கு வந்தவர்களை ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .மதுரை நிகில் அமைப்பின் மண்டல பயற்சியாளர் தயானந்தன் மாணவர்களுக்கு ஆளுமை தன்மை வளர்க்கும் பயற்சி அளித்தார்.அகம் ஐந்து என்கிற தலைப்பில் அன்பு செலுத்துதல்,பொறுப்புணர்வு,ஒற்றுமை,நேர்மை,பிறர் நிலையில் இருந்து பார்த்தல் என்கிற 5 பண்புகள் தொடர்பாகவும்,புறம் 5 என்கிற தலைப்பில் கவனித்தல் ,பாராட்டுதல்,ஆழமான சிந்தனை,ஆக்க சிந்தனை ,கோபத்தை கையாளுதல்என்கிற 5 பண்புகள் தொடர்பாகவும் மாணவர்கள் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில்  , பல்வேறு விளையாட்டு முறையின் மூலமாகவும் எடுத்து விளக்கினார் . மாணவ,மாணவியரை பல குழுக்களாக பிரித்து அவர்களுக்குள் ஒரு தலைவரை தேர்ந்தெடுத்து அதன் மூலம் பயிற்சி அளித்தார்.குழுக்களுக்குள் எவ்வாறு ஒற்றுமையை கொண்டு வருவது என்பதை செயல்கள் மூலம் செய்து நேரடியாக விளக்கம் அளித்தார்.அடுத்தவர் நிலையை உணர்ந்து கொள்ளுதல் சார்பாக படங்களும் போட்டு காண்பிக்கப்பட்டது.பெற்றோர்கள் எவ்வாறு கஷ்டப்பட்டு பிள்ளைகளை வளர்க்கிறார்கள் என்பதும் தெளிவாக சில படங்களின் வழியாக காண்பிக்கப்பட்டது.இதனை பார்த்த பெருவாரியான மாணவியர்கள் தங்கள் அம்மாவும் இது போல்தானே கஷ்டப்பட்டு நம்மை படிக்க வைக்கின்றனர் என்று கண்ணீர் விட்டு அதன் அர்த்தத்தை புரிந்து அழுதனர்.இனிமேல் நாங்கள் அம்மா,அப்பா சொல்வதை நன்றாக கேட்போம் என்று உறுதி எடுத்து கொண்டனர்.ஆளுமை தன்மை தொடர்பாக சக்தி,முத்தழகி,செந்தில்,நந்தகுமார்,காயத்ரி,முனீஸ்வரன் உட்பட பல மாணவ,மாணவியர் சந்தேகங்களை கேட்டு பதில் பெற்றனர்.பயிற்சியின்போது பல்வேறு மாணவ,மாணவியர் இது வரை தாங்கள் தெரியாமல் பொய் சொன்னது உண்டு என்றும் இனிமேல் பொய் சொல்ல மாட்டோம் என்றும் நல்ல செயல்களையே செய்வோம் என்றும் பேசினார்கள்.நிறைவாக ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.

பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அகம் ஐந்து ,புறம் ஐந்து என்ற தலைப்பில் ஆளுமை தன்மை வளர்க்கும் பயிற்சியினை மண்டல பயற்சியாளர் தயானந்தன் பயற்சி கொடுத்தார்.

No comments:

Post a Comment