புதிய கட்டிலுக்கு பாலிஷ் போட்டது தொடர்பான எனது அனுபவம்
நண்பர்களே புதிதாக செய்த கட்டிலுக்கு பாலிஷ் போடுவதற்காக முதலில் ஒரு நபரை அழைத்து இருந்தேன். அவரோ என்னிடம் போனில் 3,000 ரூபாய் ஆகும் என்று கூறியிருந்தார்.
ஆனால் நேரில் சந்தித்தபோது 6 ஆயிரம் ரூபாய் கூலி கொடுக்க வேண்டும் என்றும், 3000 ரூபாய்க்கு சாமான்கள் வாங்க வேண்டும் என்றும் கூறினார்.
அடுத்ததாக இன்னொரு நண்பரை பாலீஷ் போடுவதற்கு அணுகியபோது அவர் ஜமான்களுடன் மொத்தத்தில் 5000 ரூபாய் கொடுத்து விடுங்கள் என்று கூறினார்.
நேரில் அவரை சந்தித்த போது எனக்கு ஆயிரம் ரூபாய் சம்பளமும், என்னுடைய உதவியாளருக்கு 900 ரூபாய் சம்பளமும் கொடுங்கள். இரண்டு நாட்களில் முடித்து விடுவோம் என்று கூறினார்.
முதல் நாள் உதவியாளர் மட்டும் வருவார் என்றும், இரண்டாம் நாள் உதவியாளரும், நானும் வருவோம் என்றும் கூறினார். பாலிஷ் போடும் மெஷின் வாடகைக்கு எடுக்க வேண்டும் என்றும் என்னிடம் தெரிவித்தார்.
வாடகை ஐநூறு ரூபாய் கொடுத்து விட வேண்டும் என்றும் கூறினா.ர் சரி என்று கூறிவிட்டேன்.
மீண்டும் ஒரு நண்பரின் மூலமாக புதியதாக பாலிஷ் போடுபவரை சந்தித்தேன். அவரோ ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்து விடுங்கள். இரண்டு பேரும் ஒரே நாளில் முடித்து விட்டு சென்று விடுகிறோம்.
சீலர் அடித்து பிரின்ஸ் பாலீஷ் போடுகிறோம் என்று என்னிடம் கூறினார். எனது சித்தப்பா பொறியாளராக இருப்பவரிடம் பேசினேன்.
அவரோ பிரின்ஸ் பாலிஷ் வேண்டாம், மேலெமென் பாலிஷ் போட சொல்லுங்கள் என்று கூறினார். மீண்டும் அந்த நபரிடம் பேசி மெலமைன் பாலிஷ் போடுவதற்கு ஏற்பாடு செய்தேன்.
காலையில் 7.25 மணிக்கு வேலைக்கு வந்தவர்கள் மதியம் 1.30 மணிக்கெல்லாம் முடித்துவிட்டார்கள். நன்றாக சீவி விட்டு, பிறகு ஷீன்லாக் தடவி , அதனை உப்பு தாள் வைத்து தேய்த்து எடுத்துவிட்டு, மீண்டும் ஷீன்லாக் தடவி , அதனை உப்பு தாள் வைத்து தேய்த்து எடுத்தனர்.
அதன் மீது இரண்டு கோட்டு அடித்து அதனையும் சுத்தம் செய்து, மீண்டும் மெலேமேன் இரண்டு கோட் அடித்தார்கள்.. பார்ப்பதற்கு மிக அருமையாக கட்டில் அமைந்திருந்தது.
பாலிஷ் போடுவது எப்படி என்பதை மிகத் தெளிவாக தெரிந்து கொண்டேன். பாலிஷ் போடுவதற்கு தேவையான சாமான்கள் என்ன என்பதையும் படத்தில் காட்டியுள்ளேன்.
மெலேமேன் அரை லிட்டர் வாங்கினால் போதுமானது. ஏனென்றால் நான் ஒரு லிட்டர் வாங்கி அது அதிகமாக இருக்கின்றது.
மெஷினில் பாலிஷ் போடுவதை விட கையால் பாலிஷ் போடுவது சிறந்தது என்று பலரும் தெரிவித்தார்கள். ஆனால் பெரும்பான்மையானவர்கள் மிஷின் பாலிசி தான் போடுவதாக சொல்கிறார்கள்.
எனவே இந்த நண்பர் கையால் போடக்கூடிய பாலிசி தான் போட்டு கொடுத்தார். எனது வேலை மிகவும் நன்றாக முடிவடைந்தது. பாலிஷ் போடுவது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தான் இந்த தகவலை பகிர்ந்து உள்ளேன்.
பாலிஷ் போடுவதால் அடுத்தடுத்த ஆண்டுகளில் மெலேமேன் மட்டும் வாங்கி மேலே ஒரு கோடு அடித்துக் கொண்டால் போதும் என்று பாலிஷ் போட்டவர் கூறினார்.
நான் செய்து இருந்த கட்டில் ஒரே மரமாக இருந்ததாலும் பாலிஷ் போடுவதற்கு மிக எளிதாக இருந்தது.
மரங்கள் வேறு வேறு ஆகவோ அல்லது வேறு வேறு விதமாகவும் இருந்திருந்தால் மெலேமேன் பாலிஷ் சரியாக வராது. பிரின்ஸ் பாலிஷ் தான் சரியாக வரும் .
இரண்டு பாலிஷுக்கும் உள்ள வித்தியாசம் பிரின்ஸ் பாலிஷ் நாம் அதனை வருடந்தோறும் துணியால் துடைத்து விட்டு சுத்தம் செய்தாலே போதுமானது.
மெலேமேன் பாலிஸ் அப்படி கிடையாது. வருடம் ஒரு முறை அல்லது இரண்டு வருடம் ஒரு முறை மெலேமேன் வாங்கி அடிக்தால் போதுமானது.
எனக்கு வேலைக்கு வந்தவர்கள் காலை 7.25க்கு வந்து 9.50 பணியை போல் சாப்பிட சென்று விட்டு, 10.20 மணிக்கெல்லாம் வேலைக்கு வந்து விட்டார்கள்.இடையில் டீ குடிக்கவெல்லாம் செல்லவில்லை.மதியம் 1.30 மணிக்கெல்லாம் பாலிஷ் வேலை முடித்து விட்டார்கள்.
இதுதான் இப்போதைய தகவல்.கட்டில் புதியதாக செய்த அனுபவம் எப்படி இருந்தது என்பதை அடுத்த தகவலில் பகிர்கிறேன்.
நன்றி
லட்சுமணன்,
காரைக்குடி .
No comments:
Post a Comment