*🔴🛑🟢தினமலர் நாளிதழின் கடிதம் எழுதும் போட்டியில் பங்கேற்றது மறக்க முடியாத நிகழ்வு - மாணவர்கள் நெகிழ்ச்சி*
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ மாணவியர் தினமலர் நாளிதழின் கடிதம் எழுதும் போட்டியில் பங்கேற்றது மறக்க முடியாத அனுபவமாக இருந்ததாக தெரிவித்தனர்.
தினமலர் நாளிதழ் மாணவ, மாணவியருக்கு கோடை விடுமுறையில் தங்களது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கடிதம் எழுதும் போட்டியை அறிவித்திருந்தார்கள். அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ மாணவியரை கடிதம் எழுதுவதற்கு பள்ளி தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியைகள் முத்துலட்சுமி ஆகியோர் ஊக்குவிப்பு செய்து மாணவர்களை கடிதம் எழுத உற்சாகப்படுத்தினார்கள். அதன் அடிப்படையில் மாணவர்கள் கடிதம் எழுதி தங்களது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் போஸ்ட் செய்ததில் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த போட்டியில் முதல் வகுப்பு மாணவர் சர்வேஸ்வரன் உட்பட எட்டாம் வகுப்பு மாணவர்கள் வரை பங்கேற்றனர்.
இது குறித்து மாணவர்கள் கூறுகையில்,உறவினர்களுக்கு இதுவரை அலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பேசியிருந்தோம். வாட்ஸ்அப் மூலமாக தகவல்களை அனுப்பியது மட்டுமே சமீபகாலத்தில் தகவல் தொடர்பாக எண்ணியிருந்தோம். ஆனால் தினமலர் நாளிதலின் கடிதம் எழுதும் போட்டியால் எங்களது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கடிதம் வாயிலாக எங்களது கருத்துக்களை எழுதி அனுப்பியது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இது எங்களது வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிகழ்வாகும் என்று மாணவ-மாணவியர் தெரிவித்தார்கள். தினமலர் நாளிதழில் இந்த புதிய முயற்சிக்கு பள்ளியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ மாணவியர் தினமலர் நாளிதழில் கடிதம் எழுதும் போட்டியில் பங்கேற்று தங்களது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கடிதம் எழுதி அனுப்பினார்கள். கடிதம் எழுதிய நிகழ்வு மறக்க முடியாத அனுபவமாக இருந்ததாக தெரிவித்தார்கள்.
No comments:
Post a Comment