Tuesday, 15 April 2025

 

தீத்தொண்டு நாள் விழா 








தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தீத்தொண்டு   வாரத்தையொட்டி தேவகோட்டை  தீயணைப்பு மற்றும் மீட்பு  துறையினர் மாணவர்களுக்கு  நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

             நாடு முழுவதும் ஆண்டுதோறும், ஏப்., 14 முதல், 20ம் தேதி வரை தீத்தொண்டு நாள்  அனுசரிக்கப்பட்டுவருகிறது.  ஆசிரியை முத்துலெட்சுமி   வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை  தீயணைப்பு துறை நிலைய அலுவலர் கணேசன்  தீ விபத்து குறித்து பள்ளியில்  மாணவர்களிடம்  நோட்டீஸ் வழங்கியும் , தீ அணைப்பு கருவிகளின் செயல்பாடுகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.   தீயணைப்பு வீரர்கள்   தீ விபத்து ஏற்படாமல் இருக்க மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தீ விபத்துகள் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கினர்.ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

 

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தீத்தொண்டு வாரத்தையொட்டி தேவகோட்டை  தீயணைப்பு துறை நிலைய அலுவலர் கணேசன்  தீ விபத்து குறித்து பள்ளியில்  மாணவர்களிடம்  நோட்டீஸ் வழங்கியும் , தீ அணைப்பு கருவிகளின் செயல்பாடுகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

 

வீடியோ :  

No comments:

Post a Comment