மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா
மனிதன் இல்லாமல் மரம் உயிர் வாழலாம் ஆனால் மரம் இல்லாமல் மனிதன் உயிர் வாழ முடியாது
சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பேச்சு
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சாந்தி பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி பேசுகையில் ,மாணவர்கள் மரங்களை வளர்ப்பதன் மூலம் மரங்களின் நன்மைகளைப் பற்றி இளம் வயதிலேயே தெரியவரும்.
மனிதன் இல்லாமல் மரம் உயிர் வாழலாம். ஆனால் மரம் இல்லாமல் மனிதன் உயிர் வாழ முடியாது. ஒரு மரத்தை வெட்டுவது ஒரு உயிரை அழிப்பதற்கு சமமாகும்.
இந்த கோடை விடுமுறையில் இங்கு தரப்படும் மரக்கன்றுகளை மாணவர்கள் தொடர்ந்து தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தால் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
கடந்த ஆறு ஆண்டுகளாக நான் எனது சொந்த கிராமத்தின் அருகில் உள்ள தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி செடிகளை வளர்ப்பதற்கான ஆலோசனைகளையும் அளித்து வருகின்றேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி தருகின்றது.
மரம் வளருங்கள். வாழ்க்கையில் நல்ல நிலையை அடையுங்கள். மரம் தான் நமக்கு நல்ல சுவாசத்தை கொடுக்கும். இவ்வாறு பேசினார்.
நிகழ்வில் சார் ஆட்சியர் அலுவலக தட்டச்சர் அன்பரசன் உட்பட ஏராளமான பெற்றோர்கள் பங்கேற்றனர். நிறைவாக ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.
படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. தேவகோட்டை சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சாந்தி மரக்கன்றுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .தேவகோட்டை நேர்முக சார் ஆட்சியரின் அலுவலக தட்டச்சர் அன்பரசன் உட்பட ஏராளமான பெற்றோர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
வீடியோ : https://www.youtube.com/watch?v=wKdCnaNuuH4
No comments:
Post a Comment